இந்தியா – வங்கதேசம் முதல் டெஸ்ட்… ரூ.200க்கு டிக்கெட் விற்பனை: முழு விவரம்!

Published On:

| By christopher

India-Bangladesh 1st Test... Ticket Sale for Rs.200 : Full Details!

இந்தியா – வங்கதேச அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் இன்று (செப்டம்பர் 19) காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது.

இந்தியாவுக்கு சுற்றுப்பயணமாக வந்துள்ள வங்கதேச கிரிக்கெட் அணி 2 டெஸ்ட் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாடுகிறது.

அதன்படி இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் முதலாவது டெஸ்ட் போட்டியில் இரு அணிகளும் மோதுகின்றன.

உற்சாகத்தில் வங்கதேசம்… கட்டாயத்தில் இந்தியா!

பாகிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் வென்ற சாண்டோ தலைமையிலான வங்கதேச அணி அதே உற்சாகத்துடன் இந்திய அணியை எதிர்கொள்கிறது.

கடைசியாக இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி 2-0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரை இழந்திருந்தது. இந்த நிலையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு டெஸ்ட் போட்டியில் விளையாடும் இந்திய அணி, வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை வெல்ல வேண்டும் என்ற கட்டாயத்தில் களமிறங்குகிறது.

டிக்கெட் விற்பனை!

இந்தியா – வங்கதேச அணிகள் இடையேயான முதல் டெஸ்ட் போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று காலை 7 மணிக்கு தொடங்கியுள்ளது.

போட்டி நடைபெறும் 5 நாட்களுக்கும் அன்றைக்கு காலை 7 மணிக்கு ரூ.200, ரூ.400 ,ரூ.1000 என 3 பிரிவுகளில் டிக்கெட் விற்பனை செய்யப்படும் என தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது.

நேரலையில் பார்க்கலாமா?

இந்த போட்டியின் நேரடி ஒளிபரப்பை ஸ்போர்ட்ஸ் 18 மற்றும் கலர்ஸ் சினிப்ளெக்ஸ் சேனல்களில் பார்க்கலாம். ஆன்லைனில் ஜியோசினிமா இணையதளம் மற்றும் ஆப்களில் பார்க்கலாம்.

இந்திய அணி விவரம்!

ரோஹித் சர்மா (கேப்டன்), ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், சுப்மன் கில், விராட் கோலி, கே.எல்.ராகுல், ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஷ்வின், சர்பராஸ் கான், அக்சர் படேல், குல்தீப் யாதவ், துருவ் ஜூரல், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், யாஷ் தயாள் , ஆகாஷ் தீப்

வங்கதேச அணி விவரம்!

நஜ்முல் ஹொசைன் சாண்டோ (கேப்டன்), லிட்டன் தாஸ் (விக்கெட் கீப்பர்), மஹ்முதுல் ஹசன் ஜாய், ஷத்மன் இஸ்லாம், ஜாகிர் ஹசன், மொமினுல் ஹக், ஷாகிப் அல் ஹசன், முஷ்பிகுர் ரஹீம், ஜாக்கர் அலி, மெஹிதி ஹசன் மிராஸ், கலீத் அகமது, ஹசன் மஹ்மூத், தாஸ்கின் அகமது, இஸ்லாம், நயீம் ஹசன், நஹித் ராணா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

 

கிறிஸ்டோபர் ஜெமா

இருளில் வாழ்ந்த பழங்குடியினருக்கு கிடைத்த ‘மின்’ ஒளி!

சந்திரயான்-4 திட்டத்துக்கு ரூ.2,104 கோடி ஒதுக்கீடு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share