இந்தியா-ஆஸ்திரேலியா டி 20 போட்டி: தாமதம் ஏன்?

விளையாட்டு

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையே செப்டம்பர் 20 ஆம் தேதி மொஹாலி மைதானத்தில் நடைபெற்ற முதலாவது டி20 போட்டியில் இந்திய அணியை ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இத்தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்நிலையில், இரண்டாவது டி20 போட்டியானது இன்று (செப்டம்பர் 23) நாக்பூர் மைதானத்தில் நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி, இன்று மாலை 6:30 மணிக்கு டாஸ் போடப்பட்டு 7 மணிக்கு போட்டி ஆரம்பிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இன்று நாக்பூர் நகர் முழுவதும் பலத்த மழை பெய்து வருகிறது.

அதன் காரணமாக டாஸ் போடுவதில்கூட தாமதம் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து இரவு 7 மணிக்கு மைதான ரிப்போர்ட் வெளியானது.

அதில் மைதானத்தின் அவுட் ஃபீல்ட் ஈரப்பதமாக இருப்பதனால் 8.30 மணிக்கு மீண்டும் மைதானம் பரிசோதிக்கப்படும் என்றும் அதன் பிறகு போட்டி துவங்குவது பற்றி அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்பட்டது.

இதையடுத்து, இந்த இரண்டாவது டி20 போட்டி துவங்குவதில் கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் கால தாமதம் ஏற்பட்டுள்ளது. மேலும், இந்த ஆட்டத்தில் ஓவர்கள் குறைக்கப்பட்டு போட்டி நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மு.வா.ஜெகதீஸ் குமார்

தொடரும் பெட்ரோல் குண்டு: கோவையில் போலீஸ் ஊர்வலம்!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0