india A need to chase pakistan

ஆசிய கோப்பை பைனல்: பாகிஸ்தானின் இலக்கை தாண்டுமா இந்தியா?

விளையாட்டு

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் ஏ அணி குவித்துள்ள 352  ரன்களை இலக்காக கொண்டு துரத்தி வருகிறது இந்தியா ஏ அணி.

இலங்கையின் கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் இன்று (ஜூலை 23) நடைபெற்று வரும் இளையோருக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியா ஏ மற்றும் பாகிஸ்தான் ஏ அணிகள் மோதி வருகின்றன.

மதியம் 2 மணியளவில்  தொடங்கிய இப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா ஏ அணி பவுலிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து பாகிஸ்தான் பேட்ஸ்மேன்கள் களத்தில் இறங்கினர்.

தொடக்க வீரர்கள் சைம் அயுப் 59 ரன்னும், சஹிப்சதா பர்கான் 65 ரன்னும்  எடுத்து சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர். அடுத்து வந்த ஒமர் யூசுப் 35 ரன்கள் சேர்த்தார். அதிரடியாக ரன்கள் சேர்த்த தய்யப் தாஹிர் சதமடித்து (108 ரன்கள்) எடுத்து அணியின் ஸ்கோரை இமால ஸ்கோராக மாற்றினார்.

அடுத்து வந்தவர்களில் முபாசிர் கான் மட்டும் 35 ரன்கள் சேர்த்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

50 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் ஏ அணி 8 விக்கெட்டுகளை இழந்து 352 ரன்கள் எடுத்துள்ளது. இந்திய அணி தரப்பில் ஹங்கர்கேகர், ரியான் பராக் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

இதனையடுத்து இதையடுத்து 353 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சவாலான இலக்கை நோக்கி இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் விளையாடி வருகின்றனர்.

தற்போது 12 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 80 ரன்களுடன் விளையாடி வருகின்றனர். தொடக்க ஆட்டக்காரரான தமிழகத்தைச் சேர்ந்த சாய் சுதர்சன் 29 ரன்களில் ஆட்டமிழந்துள்ளார்.

களத்தில் கேப்டன் யாஷ் துல் மற்றும் அபிஷேக் சர்மா ஆகியோர் தொடர்ந்து விளையாடி வருகின்றனர்.

இந்த தொடரில் தோல்வியையே சந்திக்காமல் இறுதிப்போட்டியில் நுழைந்துள்ள இந்திய அணி இந்த போட்டியிலும் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வெல்ல வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர்.

கிறிஸ்டோபர் ஜெமா

மணிப்பூர் கலவரம்… குக்கி இன மக்களுக்கு எதிராக பாஜக முதல்வர்: கனிமொழி

அநீதி விமர்சனம்: இயக்குனர் வசந்தபாலனின் வெம்மையான உலகம்!

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *