IND vs ZIM: கேப்டனாக சுப்மன் கில்… யாருக்கெல்லாம் வாய்ப்பு?

விளையாட்டு

IND vs ZIM: 2024 டி20 உலகக்கோப்பைக்கு பின், ஜிம்பாப்வேவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி, 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது. இந்நிலையில், இந்த தொடருக்கான இந்திய அணியை தற்போது பிசிசிஐ அறிவித்துள்ளது.

இந்த தொடரில், இந்திய அணிக்கு கேப்டனாக சுப்மன் கில் அறிவிக்கப்பட்டுள்ளார். ரோகித் சர்மா துவங்கி, விராட் கோலி, ஜஸ்பிரித் பும்ரா, ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா என அனைத்து சீனியர் வீரர்களுக்கும் இந்த தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

சுப்மன் கில்லுடன், யசஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ருதுராஜ் கெய்க்வாத் என 2 துவக்க ஆட்டக்காரர்கள் அணியில் இடம்பெற்றுள்ளனர்.

சஞ்சு சாம்சன் மற்றும் துருவ் ஜூரேல் என 2 விக்கெட் கீப்பர்களுக்கு இந்த தொடரில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

மேலும், ரிங்கு சிங்குடன் ஐபிஎல்-இல் அசத்திய அபிஷேக் சர்மா, ரியான் பராக், நிதிஷ் ரெட்டி ஆகியோரும் அணியில் இடம் பிடித்துள்ளனர்.

வாஷிங்டன் சுந்தர் மற்றும் ரவி பிஸ்னாய் ஆகியோர் இந்திய அணிக்கு திரும்பியுள்ள நிலையில், துஷார் தேஸ்பாண்டேவுக்கும் இந்த இந்திய அணியில் இடம் வழங்கப்பட்டுள்ளது.

இந்திய அணி: சுப்மன் கில் (c), யசஸ்வி ஜெய்ஸ்வால், ருதுராஜ் கெய்க்வாத், அபிஷேக் சர்மா, ரிங்கு சிங், சஞ்சு சாம்சன் (WK), துருவ் ஜூரேல் (WK), நிதிஷ் ரெட்டி, ரியான் பராக், வாஷிங்டன் சுந்தர், ரவி பிஸ்னாய், ஆவேஷ் கான், கலீல் அகமது, முகேஷ் குமார், துஷார் தேஸ்பாண்டே

இந்தியா vs ஜிம்பாப்வே அட்டவணை

முதல் டி20ஐ – ஜூலை 6
2வது டி20ஐ – ஜூலை 7
3வது டி20ஐ – ஜூலை 10
4வது டி20ஐ – ஜூலை 13
5வது டி20ஐ – ஜூலை 14

இந்த 5 டி20 போட்டிகளும் ஜிம்பாப்வேவின் தலைநகரான ஹராரேவில் உள்ள ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

– மகிழ்

பாராசிட்டமால் உள்ளிட்ட 50 தரமற்ற மருந்துகள் கண்டுபிடிப்பு! : சிடிஎஸ்சிஓ அறிவிப்பு!

கிரேட் நிக்கோபார் திட்டத்திற்கு அனுமதி!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *