IND vs ZIM: டி20 கிரிக்கெட்டில் புதிய வரலாறு படைத்த இந்திய அணி!

Published On:

| By christopher

இந்தியா – ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில், 2 அணிகளுமே தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்றிருந்த நிலையில், ஜூலை 10 அன்று 3வது போட்டியில் மோதிக்கொண்டன.

ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், முதலில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இன்றைய ஆட்டத்தில், யசஸ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன், ஷிவம் துபே ஆகியோர் அணிக்கு திரும்பினர்.

டாஸிற்கு பிறகு முதலில் பேட்டிங் செய்ய வந்த யசஸ்வி ஜெய்ஸ்வால் & சுப்மன் கில், இந்திய அணிக்கு சிறப்பான துவக்கம் அளித்தனர்.

முதல் விக்கெட்டிற்கு 67 ரன்கள் சேர்த்தபோது, ஜெய்ஸ்வால் 36 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். மறுமுனையில் சுப்மன் கில் பொறுப்பாக விளையாடி 66 ரன்கள் சேர்த்தார்.

இறுதியில், ருதுராஜ் கெய்க்வாத் 28 பந்துகளில் 49 ரன்கள் விளாச, இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 182 ரன்கள் சேர்த்தது.

ஜிம்பாப்வே அணிக்காக பிளெஸ்ஸிங் முஷரபாணி மற்றும் கேப்டன் ஷிகந்தர் ராஸா தலா 2விக்கெட்களை கைப்பற்றினர்.

183 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய ஜிம்பாப்வே அணிக்கு, டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களுக்கு அடுத்தடுத்து விக்கெட்களை பறிகொடுத்தனர். இதனால், ஜிம்பாப்வே அணி 7 ஓவர்களில் 39 ரன்களுக்கு 5 விக்கெட்களை இழந்தது.

ஆனால், அடுத்து ஜோடி சேர்ந்த டியான் மேயர்ஸ் மற்றும் கிளைவ் மடான்டே ஆட்டத்தின் போக்கையே மாற்றினர். இந்த ஜோடி பொறுப்பாக விளையாடி ரன்களை சேர்க்க, காற்று ஜிம்பாப்வே பக்கம் திரும்பியது.

ஆனால், 6வது விக்கெட்டிற்கு இந்த ஜோடி 77 ரன்கள் சேர்த்தபோது, கிளைவ் மடான்டே 37 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

மறுமுனையில் டியான் மேயர்ஸ் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 65 ரன்கள் சேர்த்தபோதும், ஜிம்பாப்வே அணி 20 ஓவர்களில் 159 ரன்கள் மட்டுமே சேர்த்தது.

இதன்மூலம், இந்திய அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, தொடரில் 2-1 என முன்னிலை பெற்றுள்ளது.

இப்போட்டியில், இந்திய அணிக்காக சிறப்பாக பந்துவீசி, 4 ஓவர்களில் வெறும் 15 ரன்கள் மட்டுமே வழங்கி 3 விக்கெட்களை கைப்பற்றிய வாஷிங்டன் சுந்தர் ‘ஆட்ட நாயகன்’ விருதை வென்றார்.

அதுமட்டுமின்றி, இந்த வெற்றியின் மூலம் டி20 கிரிக்கெட்டில் இந்திய அணி ஒரு புதிய வரலாற்றை படைத்துள்ளது.

சர்வதேச டி20 போட்டிகளில் 150 வெற்றிகளை பெற்ற முதல் அணி என்ற வரலாற்று சாதனையை இந்தியா படைத்துள்ளது.

இந்த பட்டியலில் 142 வெற்றிகளுடன் பாகிஸ்தான் 2வது இடத்திலும், 111 வெற்றிகளுடன் நியூசிலாந்து 3வது இடத்திலும் உள்ளது.

– மகிழ்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிச்சன் கீர்த்தனா : மக்னா மலாய் கறி

ஹெல்த் டிப்ஸ்: உடல் எடையை வேகமாகக் குறைக்க நினைப்பவரா நீங்கள்? எச்சரிக்கும்  ஐசிஎம்ஆர்!

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் அறிவிப்பு!

ஒரு டோக்கன் கொடுத்தது தப்பாப்பா? : அப்டேட் குமாரு

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Leave a Comment