ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி இறுதிக்கட்டதை எட்டியுள்ளது. நாளை நடைபெறும் இறுதி போட்டியில் இந்தியா, இலங்கை அணிகள் மோதுகின்றன.
சூப்பர் 4 சுற்றில் இலங்கை அணியை 41 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இரண்டு விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. நாளை நடைபெறும் இறுதி போட்டியில் இரண்டு அணிகளும் கோப்பையை கைப்பற்றுவதில் தீவிர முனைப்பில் ஈடுபட்டுள்ளனர்.
ஆசியகோப்பை 2023 இறுதிப்போட்டி விவரங்கள்
நாள்: 17.09.2023
நேரம் : மாலை 3 மணி
நேரடி ஒளிபரப்பு: டிஸ்னி ஹாட் ஸ்டார்
இடம்: பிரேமதாசா மைதானம், இலங்கை
மற்ற நாடுகளில் நேரடி ஒளிபரப்பு
பாகிஸ்தான்: பிடிவி ஸ்போர்ட்ஸ், டென் ஸ்போர்ட்ஸ்
வங்கதேசம்: காசி டிவி
இங்கிலாந்து: டிஎன்டி ஸ்போர்ட்ஸ் ஆப்
ஆஸ்திரேலியா: ஃபாக்ஸ் ஸ்போர்ட்ஸ், ஃபாக்ஸ் டெல் ஆப்
தென் ஆப்பிரிக்கா: சூப்பர் ஸ்போர்ட்ஸ்
இறுதிப்போட்டியில் ஆடும் வீரர்கள்
இந்தியா
ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, கேஎல் ராகுல், இஷான் கிஷன், ஹர்திக் பாண்டியா, ரவிந்திர ஜடேஜா, அக்சர் பட்டேல், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ்
இலங்கை
நிசாங்கா, கருணாரதே, குசால் மெண்டிஸ், சதீரா சமரவிக்ரமா, அசலங்கா, தனஞ்செயா டி சில்வா, தசன் ஷனகா (கேப்டன்), வெள்ளலகா, தீக்ஷனா, கசன் ரஜிதா, பதிரனா
செல்வம்
திமுக முப்பெரும் விழா: வேலூர் சென்றார் முதல்வர்
கொடநாடு பற்றி தனபால் பேசக்கூடாது : நீதிமன்றத்தை நாடிய எடப்பாடி