நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் 5வது நாள் ஆட்டம் நடைபெற உள்ள நிலையில், இன்று (அக்டோபர் 20) மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் கடந்த 16ஆம் தேதி தொடங்கியது.
பெரும் எதிர்பார்ப்புடன் தொடங்கிய இந்த போட்டியின் முதல் நாள் ஆட்டம் மழையால் முழுவதுமாக கைவிடப்பட்டது.
இரண்டாவது நாளில் தொடங்கிய போட்டியில் இந்திய அணி 46 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தது. அடுத்து முதல் இன்னிங்ஸில் விளையாடிய நியூசிலாந்து அணி ரச்சின் ரவீந்திரா சதத்துடன் 402 ரன்கள் குவித்தது.
தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸில் களமிறங்கிய இந்திய அணியில் சர்ப்ராஸ் கானின் சர்வதேச டெஸ்ட் போட்டியில் தனது முதல் சதத்தை பதிவு செய்து 150 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
அவருடன் ரிஷப் பண்ட் 99 ரன்கள், விராட் கோலி 70 ரன்கள் மற்றும் கேப்டன் ரோகித் சர்மா 52 ரன்களுடன் இந்திய அணி 462 ரன்கள் சேர்த்தது.
இதன் மூலம் நியூசிலாந்து அணி வெற்றி பெற 107 ரன்கள் என்ற எளிய இலக்கை நிர்ணயித்தது இந்திய அணி.
ஆனால் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் காலை 9 மணி முதல் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது நியூசிலாந்து அணிக்கு அதிர்ச்சி அளித்துள்ளது.
காலை 9:00 மணி முதல் மாலை 4.00 மணி வரை சராசரியாக 50 சதவீதம் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. எனினும். இடையே சில மணி நேரம் மழை நிற்கும். இடைவிடாமல் மழை பெய்ய வாய்ப்பு இல்லை என்றும் கணிக்கப்பட்டு இருக்கிறது.
மழை குறுக்கீடு இல்லாத நிலையில், 10 விக்கெட்டுகளை கைவசம் வைத்திருக்கும் நியூசிலாந்து அணிக்கு சுமார் 15 ஓவர்கள் கிடைத்தால் கூட, 107 ரன்கள் என்ற இலக்கை விரைவாக எட்ட முயற்சிக்கும்.
அப்படி நடந்தால் அது இந்திய அணி சொந்த மண்ணில் தோல்வியை சந்திப்பதை யாருமே தடுக்க முடியாது. அதனால் இன்று முழுவது மழை பெய்து கடைசி நாள் போட்டி முழுமையாக ரத்தாக வேண்டும் என இந்திய ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இதற்கிடையே கடைசி நாள் ஆட்டம் இன்று காலை 9.15 மணிக்கு தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், மைதானம் ஈரப்பதம் காரணமாக தற்போது வரை போட்டி துவங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
”அரசு மருத்துவமனைகளில் சுகாதார குறைபாடு” : சுப்ரியா சாஹு அதிருப்தி!
பிக் பாஸ் சீசன் 8 : வீட்டை விட்டு வெளியேறும் அர்ணவ்!