james anderson first seamer get 700 wickets
இந்தியா – இங்கிலாந்து இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் 5-வது போட்டி தர்மசாலாவில் நடைபெறுகிறது. இப்போட்டியில், முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 218 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது.
தொடர்ந்து, முதல் இன்னிங்ஸில் விளையாட களமிறங்கிய இந்திய அணிக்கு எதிராக பந்து வீசிய ஜேம்ஸ் ஆண்டர்சன், சுப்மன் கில் மற்றும் குல்தீப் யாதவ் என 2 பேரின் விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதன்மூலம், டெஸ்ட் கிரிக்கெட்டில் 700 விக்கெட்டுகளை கைப்பற்றி ஒரு இமாலய சாதனையை படைத்துள்ளார், இந்த 41 வயது இளைஞர் ஜேம்ஸ் ஆண்டர்சன்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் 700 விக்கெட்டுகளை கைப்பற்றிய 3-வது வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சன் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், டெஸ்ட் கிரிக்கெட்டில் 700 விக்கெட்டுகளை கைப்பற்றிய முதல் வேகப்பந்துவீச்சாளர் என்ற பெருமையையும் ஜேம்ஸ் ஆண்டர்சன் இதன்மூலம் பெற்றுள்ளார்.
இவருக்கு முன்னதாக, முத்தையா முரளிதரன் மற்றும் ஷேன் வார்னே ஆகியோர் மட்டுமே டெஸ்ட் கிரிக்கெட்டில் 700-க்கும் அதிகமான விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்த நிலையில், அவர்கள் இருவருமே சுழற்பந்து வீச்சாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அதுமட்டுமின்றி, இந்திய அணிக்கு எதிராக மட்டும் ஜேம்ஸ் ஆண்டர்சன் இதுவரை 149 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.
இன்னும் 1 விக்கெட்டினை எடுக்கும் பட்சத்தில் 15௦ விக்கெட்டுகளை தன்னுடைய கணக்கில் அவர் வரவு வைத்துக்கொள்வார்.
21 ஆண்டுகளுக்கு முன்பு, 20௦3-ம் ஆண்டு மே மாதத்தில் லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் ஜிம்பாப்வேவுக்கு எதிராக, தனது டெஸ்ட் பயணத்தை துவங்கிய ஜேம்ஸ் ஆண்டர்சன் தற்போது தனது 187-வது டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறார்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை எடுத்த வீரர்கள் பட்டியலில், வேகப்பந்து வீச்சாளர்களில் ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கு அடுத்தபடியாக 604 விக்கெட்டுகளுடன் ஸ்டூவர்ட் பிராட் 5-வது இடத்திலும், 563 விக்கெட்டுகளுடன் கிளென் மெக்ராத் 6-வது இடத்திலும் உள்ளனர்.
இவர்களுக்கு இடையில், இந்தியாவின் அணில் கும்ப்ளே 619 விக்கெட்டுகளுடன் 4-வது இடத்தில் உள்ளார்.
அண்மையில், டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகள் என்னும் மைல்கல்லை எட்டிய ரவிச்சந்திரன் அஸ்வின், தற்போது 516 விக்கெட்டுகளுடன் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர்கள் பட்டியலில் 9-வது இடத்தினை தக்கவைத்துக் கொண்டுள்ளார்.
-மகிழ்
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
போதைப்பொருள் புழக்கம்: எக்ஸ் பயோவை மாற்றிய எடப்பாடி
”அவர்கள் இன்னும் உலாவிக்கொண்டு தான் உள்ளனர்” – பா ரஞ்சித் காட்டம்
james anderson first seamer get 700 wickets