ஒருநாள் போட்டிகளில் ஆல்-ரவுண்டராக புதிய சாதனை படைத்த ஜடேஜா!

விளையாட்டு

தற்போது நடைபெற்று வரும் 2023 ஆசியக் கோப்பை தொடரில், இந்திய அணி ஏற்கனவே இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுவிட்ட நிலையில், தனது கடைசிசூப்பர் 4′ ஆட்டத்தில் வங்கதேச அணியை எதிர்கொள்கிறது.

இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார். இந்த போட்டியில், விராட் கோலி, ஹர்திக் பண்டியா, ஜஸ்பிரித் பும்ரா உள்ளிட்டோருக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ள நிலையில், அறிமுக வீரராக திலக் வர்மா களமிறக்கப்பட்டுள்ளார்.

இந்த ஆட்டத்தில் முதலில் பந்துவீச வந்த இந்தியாவுக்காக 35வது ஓவரை வீசிய ரவீந்திர ஜடேஜா, ஷமிம் ஹுசைன் விக்கெட்டை வீழ்த்தினார். இதன் மூலம், ஒருநாள் கிரிக்கெட்டில் தனது 200வது விக்கெட்டை ரவீந்திர ஜடேஜா பதிவு செய்தார்.

இந்நிலையில், ஒரு நாள் போட்டிகளில் 2500 ரன்களை குவித்து, 200 விக்கெட்களை கைப்பற்றிய 2வது இந்தியர் என்ற பெருமையை ஜடேஜா பெற்றுள்ளார். முன்னதாக, 1983 உலகக்கோப்பையை வென்ற இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் மட்டுமே இந்த இலக்குகளை எட்டியிருந்தார்.

இந்த ஆட்டத்தில், துவக்கத்தில் அடுத்தடுத்து விக்கெட்களை இழந்து 59-4 என்ற நிலையில் இருந்த வங்கதேச அணி, சகிப் அல் ஹசன் & தௌஹித் ஹிரிடாய் ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால், விக்கெட் வீழ்ச்சியில் இருந்து மீண்டது. இந்த அணி, 50 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 265 ரன்கள் சேர்த்தது. சகிப் அல் ஹசன் 80 ரன்களும், ஹிரிடாய் 54 ரன்களும் சேர்த்து ஆட்டமிழந்தனர். இந்தியாவுக்காக ஷ்ரதுல் தாகூர் 3 விக்கெட்களை வீழ்த்தினார்.

முரளி

“அதிகாரிகல அமலாக்கத் துறையில சேர சொல்லுங்க” : அப்டேட் குமாரு

மகளிர் உரிமை தொகை: தலைவர்கள் கருத்து!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
+1
1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *