2023 ஒருநாள் உலகக்கோப்பையை தொடர்ந்து, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில், இந்திய அணி விளையாடவுள்ளது. நவம்பர் 23 துவங்கவுள்ள அந்த டி20 தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. ind vs aus t20 squad
உலகக்கோப்பை தொடரில் பங்கேற்ற ரோகித் சர்மா, விராட் கோலி, கே.எல்.ராகுல், ஜஸ்பிரீத் பும்ரா, ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி உள்ளிட்ட அனைத்து சீனியர் வீரர்களுக்கும் ஓய்வு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சூர்யகுமார் யாதவ் இந்திய அணியின் புதிய கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். அதேபோல, ருதுராஜ் கெய்க்வாத் இந்திய அணியின் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
யசஸ்வி ஜெய்ஸ்வால் துவங்கி ரின்கு சிங் வரை பல இளம் இந்திய வீரர்களுக்கு இந்த தொடரில் விளையாட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
அதேபோல, ஆசிய கோப்பை தொடரில் ஏற்பட்ட காயத்தால், உலகக்கோப்பை தொடரில் பங்கேற்கும் வாய்ப்பை இழந்த அக்சர் பட்டேல், மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார்.
இந்திய அணி: சூர்யகுமார் யாதவ் (C), ருதுராஜ் கெய்க்வாத் (VC), இஷான் கிஷன், யசஸ்வி ஜெய்ஸ்வால், திலக் வர்மா, ரின்கு சிங், ஜிதேஷ் சர்மா (WK), வாஷிங்டன் சுந்தர், அக்சர் பட்டேல், ஷிவம் துபே, ரவி பிஸ்னாய், அர்ஷ்தீப் சிங், பிரசித் கிருஷ்ணா, அவேஷ் கான், முகேஷ் குமார்.
அதுமட்டுமின்றி, 5 போட்டிகள் கொண்ட இந்த டி20 தொடரின் கடைசி 2 போட்டிகளில், ஷ்ரேயஸ் அய்யர் துணை கேப்டனாக அணியில் இணையவுள்ளதாகவும் பிசிசிஐ தெரிவித்துள்ளது.
இந்தியா vs ஆஸ்திரேலியா டி20 தொடர் எப்போது?
முதல் போட்டி – நவம்பர் 23 – விசாகப்பட்டினம்
2வது போட்டி – நவம்பர் 26 – திருவனந்தபுரம்
3வது போட்டி – நவம்பர் 28 – குவகாத்தி
4வது போட்டி – டிசம்பர் 1 – ராய்ப்பூர்
5வது போட்டி – டிசம்பர் 3 – பெங்களூரு
ஆஸ்திரேலிய அணி: மேத்யூ வேட் (c) (wk), டேவிட் வார்னர், டிராவிஸ் ஹெட், ஸ்டீவ் ஸ்மித், கிளென் மேக்ஸ்வெல், மேட் ஷார்ட், மர்கஸ் ஸ்டோய்னிஸ், டிம் டேவிட், ஜோஷ் இங்கிலிஷ், ஜேசன் பெஹ்ரேன்டோர்ஃப், சீன் அபூட், நாதன் எல்லிஸ், ஸ்பென்சர் ஜான்சன், ஆடம் ஜாம்பா, தன்வீர் சங்கா. ind vs aus t20 squad
முரளி
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!
கிச்சன் கீர்த்தனா: மட்டர் பனீர்