ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர்-கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் முதல் இரண்டு போட்டிகளில் வெற்றிபெற்று மூன்றாவது போட்டியில் 9 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது இந்திய அணி.
இங்கிலாந்தில் வரும் ஜூன் மாதம் நடைபெற உள்ள டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு தகுதி பெற கடைசி போட்டியில் நிச்சயம் இந்திய அணி வென்றாக வேண்டும்.
இந்நிலையில், இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான 4-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இன்று (மார்ச் 09) துவங்கி நடைபெற்று வருகிறது.
இந்த போட்டியை பிரதமர் மோடியுடன் இணைந்து ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் கண்டு ரசித்தார்.
ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ், இந்தியாவுக்கு 4 நாள் பயணமாக வந்துள்ளார். அவருடன் அமைச்சர்கள் உள்பட 27 பேர் அடங்கிய பிரதிநிதிகள் குழுவும் வந்துள்ளது.
ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் இந்தியாவுக்கு வருவது இதுவே முதல் முறை ஆகும்.
இதையடுத்து இரு நாட்டு பிரதமர்களும் மைதானத்தில் உள்ள ரசிகர்கள் மற்றும் இரு நாட்டு விளையாட்டு வீரர்களும் பரஸ்பரம் கை அசைத்து தங்களது மகிழ்சியை வெளிப்படுத்தி கொண்டனர்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
முடங்கிய இன்ஸ்டாகிராம்: பதிலளிக்காத மெட்டா!
சூரியின் விடுதலை : ட்ரெய்லர் எப்படி?