இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் விளையாட உள்ள மூன்றாவது ஒருநாள் போட்டி வரும் 22-ம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது.
கடைசியாக கடந்த 2019 ஆம் ஆண்டு தான் சென்னையில் கடைசியாக ஒரு நாள் போட்டி நடைபெற்றது. அதில் இந்திய அணியும் வெஸ்ட் இண்டீஸ் அணியும் மோதின. பின்னர் 2021 ஆம் ஆண்டு இந்தியா இங்கிலாந்து அணிகள் மோதிய டெஸ்ட் போட்டி நடைபெற்றது.
தற்போது பல மாதங்களுக்கு பிறகு மீண்டும் சர்வதேச கிரிக்கெட் சென்னையில் நடைபெற இருக்கிறது.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பழைய கேலரிகள் இடிக்கப்பட்டு, தற்போது மீண்டும் புதிதாக கட்டப்பட்டுள்ளது.
தற்போது புதிய மாற்றங்களுடன் அமைக்கப்பட்டுள்ள இந்த மைதானத்தின் பெவிலியன்களை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் மூன்றாவது ஒருநாள் போட்டிக்கான டிக்கெட் விற்பனை வரும் மார்ச் 13-ம் தேதி முதல் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆன்லைனில் மார்ச் 13-ம் தேதி முதலும் கவுண்ட்டர் டிக்கெட் மார்ச் பதினெட்டாம் தேதி 11 மணி முதல் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் போட்டிக்கான குறைந்த பட்ஜெட் டிக்கெட் விலை 1200 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதிகபட்ச டிக்கெட் விலை பத்தாயிரம் ரூபாய் ஆகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. டிக்கெட் விலைகளின் பட்டியலை தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் இன்று (மார்ச் 9 ) வெளியிட்டுள்ளது.
அதன்படி 1200 ரூபாய், 1500 ரூபாய் 3000 ரூபாய், 5000 ரூபாய், 6 ஆயிரம் ரூபாய், 8000 ரூபாய் ,10 ஆயிரம் ரூபாய் என ஏழு விலை மாதிரிகளில் டிக்கெட் விற்கப்படுகிறது.
மு.வா.ஜெகதீஸ் குமார்
வடமாநில தொழிலாளர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது: டிஜிபி சைலேந்திரபாபு