தென் ஆப்பிரிக்க சுற்றுப்பயணத்திற்கு பிறகு, நாடு திரும்பியுள்ள இந்திய அணி ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது. Virat Kohli missing in first match
இந்த ஆண்டு அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகளில் டி20 உலகக்கோப்பை தொடர் நடைபெறவுள்ள நிலையில், இந்த டி20 தொடர் மிகவும் முக்கியத்துவம் பெற்றது.
அதுமட்டுமின்றி, விராட் கோலி, ரோகித் சர்மா போன்ற சீனியர் வீரர்களுக்கு முழுக்க முழுக்க ஒய்வு அளித்து இளம் வீரர்களை கொன்டே சர்வதேச டி20 தொடர்களில் இந்திய அணி விளையாடி வந்த நிலையில்,
டி20 உலகக்கோப்பை தொடரில் அவர்களுக்கான வாய்ப்பு குறித்த ரசிகர்களின் சந்தேகங்களுக்கு விடை அளிக்கும் தொடராக இந்த தொடர் அமைந்துள்ளது.
2022 டி20 உலகக்கோப்பை தொடருக்கு பிறகு, சுமார் 14 மாதங்கள் சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடாத நிலையில், இந்த தொடரில் இந்திய அணியில் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா சேர்க்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் தவிர்த்து, ஜஸ்பிரீத் பும்ரா, சூரியகுமார் யாதவ், கே.எல்.ராகுல், ரவீந்திர ஜடேஜா, ஷ்ரேயஸ் அய்யர் போன்ற முன்னணி வீரர்கள் இல்லாமல்,
முழுக்க முழுக்க இளம் அணியை கொண்டே இந்தியா, இந்த தொடரில் ஆப்கானிஸ்தான் அணியுடன் விளையாடவுள்ளது.
3 போட்டிகள் கொண்ட இந்த டி20 தொடரின் முதல் போட்டி, இன்று (ஜனவரி 11) மொஹாலியில் நடைபெறவுள்ள நிலையில், இந்த தொடருக்கு முன்னதாக இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் செய்தியாளர்களை சந்தித்தார்.
இந்த செய்தியாளர்கள் சந்திப்பில், சில தனிப்பட்ட காரணங்கள் காரணமாக விராட் கோலி முதல் டி20 போட்டியில் விளையாட மாட்டார் என ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.
இது அவரது ரசிகர்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தினாலும், 2வது மற்றும் 3வது டி20 போட்டிகளில் நிச்சயம் விராட் கோலி விளையாடுவர் என ராகுல் டிராவிட் தெரிவித்துள்ள தகவல் அவரது ரசிகர்களுக்கு ஆறுதல் அளித்துள்ளது.
முன்னதாக, இந்த டி20 தொடரில் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி துவக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கலாம் என தகவல் வெளியாகியிருந்த நிலையில்,
முதல் டி20 போட்டியில் ரோகித் சர்மா மற்றும் யசஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோர் துவக்க ஆட்டக்காரர்களாக களமிறங்க உள்ளனர் என்றும் ராகுல் டிராவிட் தெளிவுப்படுத்தியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
மகிழ்
காரோடு சேர்த்து மனைவியை இழுத்துச் சென்ற கணவர்- கண்டுகொள்ளாத போலீஸ்: குமரி கொடுமை!
தெய்வம் தந்த வீடு… வீதி இருக்கு: அப்டேட் குமாரு
Virat Kohli missing in first match