IND vs AUS : முதல் ஒரு நாள் போட்டி…வான்கடே மைதானத்தின் ரிப்போர்ட் இதோ!

விளையாட்டு

இந்திய ஆஸ்திரேலிய அணிகள் மோதும் ஒரு நாள் போட்டியின் முதல் ஆட்டம் மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நாளை (மார்ச் 17 ) மதியம் 1.30 மணிக்கு துவங்குகிறது.

இந்த மைதானத்தில் கடந்த 1987 உலகக்கோப்பை 2011 உலகக்கோப்பை ஃபைனல் உட்பட பல மறக்க முடியாத போட்டிகள் நடைபெற்றுள்ளது.

இதுவரை, வான்கடே மைதானத்தில் 27 ஒருநாள் போட்டிகள் நடைபெற்றுள்ளன. அதில் 13 போட்டிகளில் முதலில் பேட்டிங் செய்த அணிகளும் 14 போட்டிகளில் சேசிங் செய்த அணிகளும் வென்றுள்ளன.

இங்கு 19 போட்டிகளில் விளையாடியுள்ள இந்தியா 10 வெற்றிகளையும் 9 தோல்விகளையும் பதிவு செய்துள்ளது. குறிப்பாக இந்த மைதானத்தில் 4 போட்டிகளில் இந்தியாவை எதிர்கொண்ட ஆஸ்திரேலியா 3 வெற்றிகளை பதிவு செய்துள்ளது. இந்தியா ஒன்றில் மட்டுமே வென்றுள்ளது.

கடைசியாக கடந்த 2020 ஆம் ஆண்டு இந்தியா நிர்ணயித்த 255 ரன்களை துரத்திய ஆஸ்திரேலிய அணி டேவிட் வார்னர் சதத்தின் உதவியுடன் எளிதாக 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

எனவே ஆஸ்திரேலியாவுக்கு ராசியாக இருக்கும் இந்த மைதானத்தில் இந்தியா இம்முறை கவனத்துடன் விளையாட வேண்டியுள்ளது.

இங்கு ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் (455) அடித்த வீரராக சச்சின் டெண்டுல்கர் உள்ளார்.

இந்த மைதானத்தில் ஒருநாள் போட்டிகளில் அதிக விக்கெட் எடுத்த வீரராக வெங்கடேஷ் பிரசாத் உள்ளார். அவர் மொத்தம், 15 விக்கெட்கள் எடுத்துள்ளார்.

சிறந்த பந்து வீச்சை பதிவு செய்த பவுலர் முரளி கார்த்திக் : 6/27, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக.

IND v AUS First ODI

இம்மைதானத்தில் அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த அணி தென்னாப்பிரிக்கா : 438/4, இந்தியாவுக்கு எதிராக, 2015.

குறைந்தபட்ச ஸ்கோர் பதிவு செய்த அணி வங்கதேசம் : 115 ஆல் அவுட் – இந்தியாவுக்கு எதிராக, 1998.

பிட்ச் ரிப்போர்ட்

மும்பை வான்கடே மைதானத்தில் இருக்கும் பிட்ச் பிளாட்டாக இருப்பதால் டி20 கிரிக்கெட்டில் பேட்ஸ்மேன்கள் ரன் மழை பொழிந்து வருகிறார்கள்.

கிட்டத்தட்ட அதே போலவே ஒருநாள் போட்டிகளிலும் இங்கு பிளாட்டான பிட்ச் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்த மைதானத்தின் பவுண்டரி எல்லைகளும் சிறியதாகவே உள்ளது.

அதனால் கால சூழ்நிலையில் புரிந்து விளையாடும் பேட்ஸ்மேன்கள் எளிதாக அதிக ரன்களை அடிக்கலாம். இருப்பினும் ஆரம்பகட்ட புதிய பந்தில் வேகப்பந்து வீச்சாளர்கள் தாக்கத்தை ஏற்படுத்த அதிக வாய்ப்புள்ளது. அதே போல் போட்டி நடைபெற நடைபெற திறமையை வெளிப்படுத்தும் ஸ்பின்னர்கள் குறிப்பாக மிடில் ஓவர்களில் போட்டியை மாற்றும் அளவுக்கு விக்கெட்டுகளை எடுப்பார்கள்.

வெதர் ரிப்போர்ட்

நாளை மும்பையில் மழைக்கான வாய்ப்புகள் இல்லை என்பதால் ஆட்டம் முழுமையாக நடைபெறும்.

மு.வா.ஜெகதீஸ் குமார்

அருள்நிதியின் கழுவேத்தி மூர்க்கன் பட அப்டேட்!

50 ஆயிரம் மாணவர்கள் ஆப்செண்ட்: அன்பில் மகேஷ் விளக்கம்!

+1
1
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *