ஐபிஎல் 2025 மெகா ஏலம் வரும் டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் நடைபெற வாய்ப்புள்ளது. மெகா ஏலத்துக்கு முன்னதாக, அக்டோபர் 31 ஆம் தேதிக்குள் ஒவ்வொரு அணிகளும் தக்க வைத்துக் கொள்ள போகும் வீரர்கள் பட்டியலை பிசிசிஐயிடம் அளிக்க வேண்டும்.
இந்த சூழலில் லக்னோ அணியில் இருந்து கே எல் ராகுல் நீக்கப்பட வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. லக்னோ அணி ராகுலை தக்க வைக்க விரும்பினாலும் தனிப்பட்ட முறையில் ராகுல் அந்த அணிக்காக விளையாடும் மன நிலையில் இல்லை என்று டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது. அப்படி, கே.எல். ராகுல் நீக்கப்பட்டால் அவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ளதாக முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஆகாஷ் சோப்ரா,’ ஒரு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக கேஎல் ராகுல் ஒவ்வொரு சீசனிலும் 500 முதல் 600 ரன்கள் அடிக்கிறார். ஆனால் அவருடைய ஸ்ட்ரைக் ரேட் குறைவாக இருக்கிறது என்று பலரும் விமர்சிக்கின்றனர். பலரும் அவருடைய கிரிக்கெட் வாழ்க்கை முடிந்து விட்டது என்று கூறுகின்றனர்.
ஆனால், சிஎஸ்கே அணி கே எல் ராகுலை ஏலத்தில் எடுத்துக் கொள்ளும் வாய்ப்பு இல்லாமல் இல்லை. அது மட்டும் இல்லாமல் கே.எல் ராகுல் பெங்களூர் அணிக்கு கூட செல்ல வாய்ப்பு இருக்கிறது. அவர், பெங்களூரில் பிறந்து வளர்ந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அது மட்டுமல்ல, பஞ்சாப் , ராஜஸ்தான் அணிகளும் ராகுலை வாங்க முயற்சிக்கும்’ என்று தெரிவித்துள்ளார்.
அதே போல, ரிஷப் பண்ட் ஏலத்திற்கு வந்துவிட்டால் அவரை எப்படியாவது தேர்வு செய்ய ஒவ்வொரு அணியும் முட்டிக் கொள்ளும் என்றும் நம்பப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்
யூடியூப்பில் வியூஸ் வராததால் விபரீதம்… யுடியூபர் தம்பதி எடுத்த முடிவு!
முத்துராமலிங்க தேவருக்கு மரியாதை செலுத்தியது ஏன்? விஷால் பேட்டி!