புதிய தேர்வுக்குழு தலைவர்: பிசிசிஐ வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

விளையாட்டு

புதிய தேர்வுக்குழு தலைவருக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாகவும் ஜூன் 30ஆம் தேதியே கடைசி நாள் என்றும் பிசிசிஐ தெரிவித்துள்ளது.

இந்திய கிரிக்கெட் ஆண்கள் அணியின் தேர்வுக் குழு தலைவராக இருந்த சேத்தன் சர்மா , அண்மையில் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போது இந்திய அணியின் தேர்வு முறை மற்றும் அணியின் செயல்பாடுகள் குறித்து வெளிப்படையாக பகிர்ந்து கொண்டார்.

அவரின் இந்த செயல்பாடுக்கு எதிர்ப்பு கிளம்பிய நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் 17 ஆம் தேதி தன்னுடைய பதவியை ராஜினாமா செய்வதாக பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷாவுக்கு கடிதம் அனுப்பினார்.

இந்நிலையில், புதிய தேர்வுக்குழு தலைவரை தேர்ந்தெடுக்கும் பணியை இந்திய கிரிக்கெட் வாரியம் தற்காலிகமாக நிறுத்தி வைத்திருந்த நிலையில் ஜூலை,

12 ஆம் தேதி முதல் ஜூலை 24 ஆம் தேதி வரை நடைபெற உள்ள வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கு முன்னதாக புதிய தேர்வுக்குழு தலைவரை தேர்ந்தெடுக்கும் பணியை தற்போது பிசிசிஐ தொடங்கியுள்ளது.

அதன்படி, புதிய தேர்வுக்குழு தலைவருக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாகவும் ஜூன் 30 ஆம் தேதியே கடைசி நாள் என்றும் பிசிசிஐ தெரிவித்துள்ளது.

மேலும் தலைவர் பதவிக்கான தகுதியும் வெளியிடப்பட்டுள்ளது.

அதில், குறைந்தபட்சம் 7 சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் விளையாடி இருக்க வேண்டும் அல்லது 30 முதல்தர போட்டிகள் அல்லது 10 ஒருநாள் சர்வதேச போட்டிகள் மற்றும் 20 முதல்தர போட்டிகளில் விளையாடி இருக்க வேண்டும் என்றும் குறைந்தது 5 ஆண்டுகளுக்கு முன்பு விளையாட்டில் இருந்து ஓய்வு பெற்றிருக்க வேண்டும் என்றும் பிசிசிஐ கூறியுள்ளது.

அதநேரம், எந்த ஒரு கிரிக்கெட் கமிட்டியிலும் மொத்தம் 5ஆண்டுகள் உறுப்பினராக இருந்தவர்கள் ஆண்கள் அணி தேர்வுக்குழுவில் உறுப்பினராக இருக்க தகுதி பெற மாட்டார்கள் என்ற நிபந்தனையையும் விதித்துள்ளது.

தேர்வுக்குழு தலைவர் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் பட்டியலிடப்பட்ட நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள் என்றும் பிசிசிஐ தெரிவித்துள்ளது.

மு.வா.ஜெகதீஸ் குமார்

கரூரில் மீண்டும் வருமான வரித்துறை சோதனை!

பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் வியூகம்!

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *