ஐபிஎல் மீது பழி போடாதீர்கள்: கம்பீர் ஆவேசம்!

விளையாட்டு

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இந்தியா தோல்வி அடைந்தால் வீரர்களைத் தான் விமர்சிக்க வேண்டுமே தவிர ஐபிஎல் தொடரை விமர்சிப்பது நியாயமற்றது என்று இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் கூறியுள்ளார்.

சமீபத்தில் நடைபெற்று முடிந்த டி20 உலகக் கோப்பை தொடரில் அரையிறுதி வரை சென்ற இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறாமல் வெளியேறியது.

இதனால் அதிருப்தி அடைந்த ரசிகர்கள் இந்திய அணியின் தோல்விக்குக் காரணம் ஐபிஎல் தொடர் தான் என்று விமர்சித்தனர்.

if india falls players performance to blame not ipl gautam gambhir

ஐபிஎல் தொடருக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தைச் சர்வதேச போட்டிகளில் இந்திய வீரர்கள் வெளிப்படுத்துவதில்லை.

ஐபிஎல் தொடர் ஆரம்பித்ததில் இருந்தே இந்தியா ஒருமுறை கூட உலகக் கோப்பையைக் கைப்பற்றவில்லை என்றும் விமர்சித்தனர்.

இந்நிலையில், இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரரும் எம்பியுமான கவுதம் கம்பீர் நேற்று (நவம்பர் 26) டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசும்போது, ”ஐபிஎல் தொடர் இந்திய கிரிக்கெட்டுக்கு கிடைத்த மிகச்சிறந்த விஷயம். நான் இதை முழு மனதுடன் சொல்கிறேன்.

2008 ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டி தொடங்கியதில் இருந்தே பல எதிர்ப்புகள் நிலவி வருகின்றன. ஒவ்வொரு முறையும் இந்திய அணி சிறப்பாக விளையாடாத போது ஐபிஎல் மீது தான் பழி வருகிறது.

ஐசிசி போட்டிகளில் வீரர்கள் சிறப்பாகச் செயல்படவில்லை என்றால், வீரர்களின் விளையாட்டைத் தான் விமர்சிக்க வேண்டும். ஆனால், ஐபிஎல் மீது விரல் நீட்டுவது நியாயமற்றது.

அதே போல் இந்திய கிரிக்கெட்டிற்கு இந்திய பயிற்சியாளர்களை நியமித்து வருவதற்கு பிசிசிஐ-க்கு பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இது மிகச் சிறந்த மாற்றம். இந்திய பயிற்சியாளர்களுக்கு வெளிநாடுகளில் வாய்ப்பு கிடைப்பதில்லை. இந்திய அணிக்கு இந்தியர்களே பயிற்சியளிக்க வேண்டும் என்று ஆழமாக நம்புகிறேன்.

வெளிநாட்டுப் பயிற்சியாளர்கள் பணத்திற்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுப்பார்கள். ஆனால் கிரிக்கெட்டில் உணர்வு கலந்திருக்காது. இந்திய அணியை உணர்வுப்பூர்வமாக நேசிப்பவர்கள் தான் இந்திய வீரர்களுக்குப் பயிற்சியளிக்க வேண்டும்.

லக்னோ அணியின் பயிற்சியாளராக நான் செயல்பட்டு வருகிறேன். அதேபோல் அனைத்து அணிகளுக்கும் இந்திய பயிற்சியாளர்கள் பயிற்சியளிக்க வேண்டும் என்று நினைக்கிறேன்” என்றார்.

மோனிஷா

FIFA WorldCup : மெக்சிகோவுடன் வெற்றி… சூட்டை கிளப்பும் மெஸ்ஸி

விஷாலின் லத்தி : பெயரை போடுமா ரெட் ஜெயண்ட்?

+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.