ஐசிசி உலகக் கோப்பை தொடரில் விளையாடும் இந்திய அணி வீரர்களை பிசிசிஐ இன்று (செப்டம்பர் 5) வெளியிட்டுள்ளது.
50 ஓவர் உலகக் கோப்பை இந்தாண்டு இந்தியாவில் நடைபெறவிருக்கிறது. இந்த தொடரில் மொத்தம் 10 அணிகள் பங்கேற்க இருக்கின்றன.
போட்டியை நடத்தும் இந்தியாவுடன் ஐசிசி தரவரிசையில் முதல் 8 இடத்தில் உள்ள நியூசிலாந்து, இங்கிலாந்து, பங்களாதேஷ், ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா ஆகிய 8 அணிகளும் நேரடியாக தகுதி பெற்றன.
ஜிம்பாப்வேயில் நடைபெற்ற மீதமிருக்கும் 2 அணிகளுக்கான தகுதிச் சுற்றுப் போட்டியில் பைனலுக்கு முன்னேறிய இலங்கை, நெதர்லாந்து அணிகளும் உலகக் கோப்பை போட்டிக்குத் தகுதி பெற்றன.
இந்தியாவில் உள்ள 10 மைதானங்களில் 46 நாட்கள் போட்டிகள் நடைபெற உள்ளது.
இதில் அகமதாபாத், சென்னை, தர்மசலா, டெல்லி, லக்னோ, புனே, மும்பை, கொல்கத்தா, பெங்களூரு மைதானங்களில் தலா 5 போட்டிகளும்,
ஹைதராபாத்தில் 3 போட்டிகளும் என மொத்தம் 48 போட்டிகள் நடைபெற உள்ளன.
அக்டோபர் 5 ஆம் தேதி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் முதல் போட்டி தொடங்கி, அதே மைதானத்தில் நவம்பர் 10 ஆம் தேதி உலகக் கோப்பை இறுதிப் போட்டி நடைபெற உள்ளது.
போட்டிகள் தொடங்குவதற்கு இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில் பிசிசிஐ இந்திய அணி வீரர்களின் பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது.
Here's the #TeamIndia squad for the ICC Men's Cricket World Cup 2023 🙌#CWC23 pic.twitter.com/EX7Njg2Tcv
— BCCI (@BCCI) September 5, 2023
ரோகித் சர்மா (கேப்டன்), ஹர்திக் பாண்டியா ( துணை கேப்டன்), விராட் கோலி, சுப்மன் கில், ஸ்ரேயாஸ் ஐயர், கே.எல்.ராகுல் , இசான் கிஷன், ஜடேஜா, குல்தீப் யாதவ், அக்சர் பட்டேல், பும்ரா, முகமது ஷமி, முகமது சிராஜ், சர்துல் தாக்கூர், சூர்யகுமார் யாதவ் ஆகியோர் இந்திய அணியில் இடம்பெற்றுள்ளனர்.
பிளேயிங்க் லெவன் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மோனிஷா
31 ஆண்டுகளுக்கு பின் இணையும் பாரதிராஜா- இளையராஜா கூட்டணி!
இந்தியா டூ பாரத்?: காங்கிரஸ் கண்டனம்!
”சனாதனத்தை அறிந்த நாங்கள் சொல்கிறோம்… அது ஒழிக்கப்பட வேண்டிய ஒன்றுதான்” – ஆ.ராசா