2023 ஒருநாள் உலகக்கோப்பை தொடரில், இதுவரை 32 லீக் போட்டிகள் முடிவு பெற்றுள்ள நிலையில், இன்னும் 13 போட்டிகள் மட்டுமே மீதமுள்ளது. இந்நிலையில், அரையிறுதிக்கான போட்டியும் தீவிரமடைந்துள்ளது.
இதுவரை வங்கதேச அணி மட்டுமே அதிகாரப்பூர்வமாக தொடரில் இருந்து விலகியுள்ளது. அதேபோல, இங்கிலாந்து அணியும் கிட்டத்தட்ட தனது அரையிறுதி வாய்ப்பை இழந்துவிட்டது என்றே கூற வேண்டும். மறுபுறத்தில், தென் ஆப்பிரிக்கா மற்றும் இந்தியா ஆகிய 2 அணிகள் 6 போட்டிகளில் வெற்றி பெற்றிருந்தாலும், அந்த அணிகளுக்கான அரையிறுதி வாய்ப்பு இன்னும் உறுதியாகவில்லை.
இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா வெற்றி பெற்றாலே போதும்
இந்நிலையில், இந்தியா அரையிறுதிக்கு தகுதி பெற இன்னும் ஒரு போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. அதன்படி, இன்று (நவம்பர் 2) இலங்கைக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறும் நோக்கிலேயே, இந்தியா இன்று களம் காண்கிறது.
மறுபுறத்தில், தென் ஆப்பிரிக்காவுக்கும் இதே நிலை தான். அந்த அணி அடுத்து இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகளுக்கு எதிராக விளையாடவுள்ள போட்டிகளில், எதோ ஒரு ஆட்டத்தில் வெற்றி பெற்றாலே போதும்.
ஆஸ்திரேலியாவும் கிட்டத்த இதே நிலையில் தான் உள்ளது. தனது அடுத்த 3 போட்டிகளிலும், அந்த அணி வெற்றி பெற்றாலே போதும், ஆஸ்திரேலியா அரையிறுதிக்கு முன்னேறிவிடும். 3 போட்டிகளை வென்றால், பிற அணிகளின் வெற்றி தோல்விகள், ஆஸ்திரேலியாவை எவ்விதத்திலும் பாதிக்காது.
நியூஸிலாந்து, ஆப்கானிஸ்தான் அணிகளுக்கான வாய்ப்புகள் என்ன?
தென் அப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் படுதோல்வியடைந்துள்ள நியூசிலாந்து, தனது அரையிறுதி வாய்ப்பை மேலும் சிக்கலாக்கியுள்ளது. அதுமட்டுமின்றி, இந்த அணியின் தோல்வி, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், இலங்கை மற்றும் நெதர்லாந்து ஆகிய அணிகளுக்கான அரையிறுதி வாய்ப்புகளை அதிகரித்துள்ளது.
தற்போது, நியூசிலாந்து அணி மீதமுள்ள 2 போட்டிகளில் காட்டாயம் வென்றாக வேண்டிய நிலையில் உள்ளது. அப்படி வெற்றி பெரும் பட்சத்தில், ஆப்கானிஸ்தான் தனது அடுத்த 3 போட்டிகளில் ஏதோ ஒரு போட்டியில் தோல்வியடைந்தால் போதும். நியூசிலாந்து அணி அரையிறுதிக்கு முன்னேறிவிடும்.
நியூசிலாந்து அணியின் அதே நிலை தான் ஆப்கானிஸ்தானுக்கும். தனது அடுத்த 3 போட்டிகளில் வெற்றி பெற வேண்டும். நியூசிலாந்து அணி, தனது அடுத்த 2 போட்டிகளில் ஏதாவது ஒரு போட்டியில் தோல்வியடைந்தால் போதும். ஆப்கானிஸ்தான் எளிதாக அரையிறுதிக்கு முன்னேறிவிடும்.
ஒரு வேலை, இந்த 2 அணிகள் ஏதாவது ஒரு போட்டியில் தோல்வியடைந்தால், பாகிஸ்தான், இலங்கை மற்றும் நெதர்லாந்து ஆகிய அணிகளின் வெற்றி தோல்விகளை பொறுத்து, 2 அணிகளுமே அரையிறுதிக்கு செல்ல அதிக வாய்ப்புகளை கொண்டுள்ளன.
பாகிஸ்தான், இலங்கை, நெதர்லாந்து அணிகள் மேஜிக்கை நிகழ்த்துமா?
தற்போது, பாகிஸ்தான் 6 புள்ளிகளையும், இலங்கை மற்றும் நெதர்லாந்து அணிகள் 4 புள்ளிகளையும் பெற்றுள்ளது. இந்த நிலையில், மீதமுள்ள அனைத்து போட்டிகளிலுமே வென்றாக வேண்டிய கட்டாயத்தில் இந்த 3 அணிகளும் உள்ளது.
அப்படி இந்த 3 அணிகளில் ஏதாவது ஒரு அணி தனது மீதமுள்ள அனைத்து போட்டிகளிலும் வெல்லும் பட்சத்தில், ஒருவேளை நியூசிலாந்து தனது அடுத்த 2 போட்டிகளிலும் தோல்வியடைந்து, ஆப்கானிஸ்தான் அணி தனது அடுத்த 3 போட்டிகளில் 2ல் தோல்வியடைந்தால், அந்த அணி அரையிறுதிக்கு செல்லும்.
கவனம் பெரும் போட்டிகள் எவை?
நவம்பர் 3 அன்று ஆப்கானிஸ்தான் மற்றும் நெதர்லாந்து அணிகள் நேருக்கு நேர் மோதிக்கொள்கின்றன. அதேபோல, நவம்பர் 4 அன்று நியூசிலாந்து அணி பாகிஸ்தான் அணியையும், நவம்பர் 9 அன்று இலங்கை அணியையும் எதிர்கொள்கிறது.
இந்த 3 போட்டிகளுமே, அரையிறுதிக்கான நேரடி போராக பார்க்கப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
முரளி
இசை நிறுவனத்தை தொடங்கும் வைஜெயந்தி மூவிஸ்!
ஆளுநருக்கு எதிராக கருப்புக்கொடி: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கைது!
விக்ரமின் நடிப்பு பிரமிப்பானது: பா.ரஞ்சித்
மொழிவாரி மாநிலங்களும் அம்பேத்கரின் எச்சரிக்கையும்!