மகளிர் டி20 உலக கோப்பை அட்டவணை!

விளையாட்டு

அடுத்த ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் நடைபெற உள்ள மகளிர் டி20 உலக கோப்பைக்கான, அட்டவணையை ஐ.சி.சி வெளியிட்டுள்ளது.

8-வது மகளிர் உலக கோப்பை டி20 கிரிக்கெட் போட்டி, அடுத்த ஆண்டு (2023) பிப்ரவரி மாதம் 10-ஆம் தேதி நடைபெற உள்ளது. இறுதிப் போட்டியானது பிப்ரவரி 26-ஆம் தேதி நடைபெறுகிறது.

குரூப் 1-ல் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, இலங்கை, பங்களாதேஷ் ஆகிய நாடுகள் உள்ளன.

icc women's t20 world cup schedule

குரூப் 2-ல் இந்தியா, இங்கிலாந்து, மேற்கிந்திய தீவுகள், பாகிஸ்தான், அயர்லாந்து ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன.

மகளிர் டி20 கிரிக்கெட் போட்டியில், ஆஸ்திரேலிய அணி அதிகபட்சமாக 5 முறை சாம்பியன் பட்டம் பெற்றுள்ளது.

ஒவ்வொரு குரூப்பில் உள்ள அணிகளும் மற்ற 4 அணிகளுடன் ஒரு முறை மோதும்.

இரண்டு குரூப்களிலும் முதலிடம் வகிக்கும் அணிகள் அரை இறுதி சுற்றில் விளையாட உள்ளது.

இறுதிப்போட்டியானது, பிப்ரவரி 26-ஆம் தேதி நடைபெற உள்ளது.

icc women's t20 world cup schedule

இந்திய அணியை பொறுத்தவரை பிப்ரவரி 12-ஆம் தேதி பாகிஸ்தான், பிப்ரவரி 15-ஆம் தேதி மேற்கிந்திய தீவுகள், 18-ஆம் தேதி இங்கிலாந்து, பிப்ரவரி 20-ஆம் தேதி அயர்லாந்து அணிகளுடன் மோத உள்ளது.

மகளிர் டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அட்டவணை

நாள் மோதும் அணிகள் இடம்

பிப்ரவரி 10 தென் ஆப்பிரிக்கா – இங்கிலாந்து – கேப் டவுன்

பிப்ரவரி 11 மேற்கிந்திய தீவுகள் – இங்கிலாந்து – பார்ல்

பிப்ரவரி 11 ஆஸ்திரேலியா – நியூசிலாந்து – பார்ல்

பிப்ரவரி 12 இந்தியா – பாகிஸ்தான் – கேப் டவுன்

பிப்ரவரி 12 பங்களாதேஷ் – இலங்கை – கேப் டவுன்

பிப்ரவரி 13 அயர்லாந்து – இங்கிலாந்து – பார்ல்

பிப்ரவரி 13 தென் ஆப்பிரிக்கா – நியூசிலாந்து – பார்ல்

பிப்ரவரி 14 ஆஸ்திரேலியா – பங்களாதேஷ் – குபெர்கா

பிப்ரவரி 15 மேற்கிந்திய தீவுகள் – இந்தியா – கேப் டவுன்

பிப்ரவரி 15 பாகிஸ்தான் – அயர்லாந்து – கேப் டவுன்

பிப்ரவரி 16 இலங்கை – ஆஸ்திரேலியா – குபெர்கா

பிப்ரவரி 17 நியூசிலாந்து – பங்களாதேஷ் – கேப் டவுன்

பிப்ரவரி 17 மேற்கிந்திய தீவுகள் – அயர்லாந்து – கேப் டவுன்

பிப்ரவரி 18 இங்கிலாந்து – இந்தியா – குபெர்கா

பிப்ரவரி 18 தென் ஆப்பிரிகா – ஆஸ்திரேலியா – குபெர்கா

பிப்ரவரி 19 பாகிஸ்தான் – மேற்கிந்திய தீவுகள் – பார்ல்

பிப்ரவரி 20 அயர்லாந்து – இந்தியா – குபெர்கா

பிப்ரவரி 21 இங்கிலாந்து – பாகிஸ்தான் – கேப் டவுன்

பிப்ரவரி 21 தென் ஆப்பிரிக்கா – பங்களாதேஷ் – கேப் டவுன்

பிப்ரவரி 23 அரையிறுதி போட்டி 1 – கேப் டவுன்

பிப்ரவரி 24 அரையிறுதி போட்டி 2 – கேப் டவுன்

பிப்ரவரி 26 இறுதிப்போட்டி – கேப் டவுன்

செல்வம்

மௌன மொழியில் காந்தி டாக்ஸ்!

டாப் 10 செய்திகள் : இதை மிஸ் பண்ணாதீங்க..!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *