5 விக்கெட் வீழ்த்தி ரேணுகா அபாரம்: போராடி வீழ்ந்த இந்தியா!

விளையாட்டு

இங்கிலாந்திற்கு எதிரான போட்டியில் 11 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்ந்தது இந்திய மகளிர் அணி.

8வது ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை தொடர் தென்னாப்பிரிக்காவில் கடந்த பிப்ரவரி 10 ஆம் தேதி தொடங்கியது. 10 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரில் இந்திய அணி குரூப் பி பிரிவில் இடம்பெற்றுள்ளது.

முதல் லீக் போட்டியிலேயே பாகிஸ்தானுடன் மோதிய இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை விரட்டியடித்தது. தொடர்ந்து வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான இரண்டாவது லீக் போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரையிறுதிக்குள் நுழைவதற்கான புள்ளி பட்டியலில் 4 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருந்தது.

இங்கிலாந்து அணியும் புள்ளிப்பட்டியலில் 4 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருந்த நிலையில் இரு அணிகளுக்கு இடையேயான 3வது லீக் போட்டி நேற்று (பிப்ரவரி 18) இரவு 10 மணிக்கு தொடங்கியது. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி புள்ளிப் பட்டியலில் முதலிடம் பிடித்து அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்துவிடும் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது.

இதனால் இரு அணிகளும் வெற்றி பெற வேண்டும் என்று தீவிரமாக களமிறங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

ஆரம்பத்தில் இருந்து நிதானமான ஆட்டத்தை வெளிபடுத்தி வந்த இங்கிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 151 ரன்கள் எடுத்திருந்தது.

icc womens t20 england won

இங்கிலாந்து அணி சார்பில் அதிகபட்சமாக நாட் ஸ்சீவர் ப்ரண்ட் 50 ரன், ஏமி ஜோன்ஸ் 40 ரன்களும் எடுத்தனர். இந்தியா சார்பில் ரேணுகா சிங் சிறப்பாக பந்து வீசி 4 ஓவர்களில் 15 ரன்களுக்கு 5 விக்கெட்களை எடுத்து அதிரடி காடினார். தீப்தி மற்றும் ஷிகா பாண்டே தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.

தொடர்ந்து 152 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு இந்திய அணி தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ஸ்மிரிதி மந்தனா, ஷஃபாலி வர்மா நிதானமாக விளையாடினர். 29 ரன்களுடன் ஷஃபாலி வர்மா கேத்ரீன் சீவியர் பந்தில் அவுட் ஆனார்.

8 ஓவருக்கு 57 ரன் இருந்த நிலையில், ஜெமியா 13 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் தவறான ஷாட் தேர்வால் 4 ரன்னில் அவுட் ஆனார். பத்து ஓவரில் 62 ரன் எடுத்திருந்த இந்திய அணியை ஸ்மிரிதி மந்தனா, ரிச்சா கோஷ் கூட்டணி வெற்றிக்கு தேவையான ரன் சேர்ப்பதை நோக்கி நகர்த்தினர்.

ஸ்மிரிதி மந்தனா 7 பவுண்ட்ரிகள், ஒரு சிஸ்சர் என்று 41 பந்துகளுக்கு 52 ரன் எடுத்து அரை சதம் அடித்தார். ஸ்மிரிதி டி-20 போட்டிகளில் தனது 21-வது அரைசதத்தை பூர்த்தி செய்தார். ஆனால், அடுத்த பந்திலேயே நாட் ப்ரண்ட் பந்தில் கேட்ச் அவுட் ஆகி பெவிலியன் திரும்பினார்.

இந்தியா 18.2 ஓவரில் 119 ரன்களுக்கு 5 விக்கெட்கள் எடுத்திருந்தது. தீப்தி சர்மா அடிக்க தொடங்கிய போது, ரன் அவுட் ஆனார். ரிச்சா கோஷ் 33 ரன்களுக்கு 47 ரன் எடுத்து அணியின் வெற்றிக்காக நிதானமாக விளையாடினார்.

கடைசி 3 பந்தில் 20 ரன் தேவை என்றிருந்த நிலையில் ரிச்சா கோஷ் அடித்த ஷாட் பவுண்டரிக்கு சென்றது. இருப்பினும் இந்திய அணி 20 ஓவர் இறுதியில் 5 விக்கெட் இழப்பிற்கு 140 ரன்கள் மட்டுமே எடுத்து இங்கிலாந்திடம் தோல்வியை தழுவியது.

இதனால் புள்ளிப் பட்டியலில் இந்தியா 4 புள்ளிகளுடனும் 2-ம் இடத்திலும் இங்கிலாந்து 6 புள்ளிகளுடன் முதலிடத்திலும் உள்ளது. இந்திய மகளிர் கிரிக்கெட் அணி நாளை அயர்லாந்து அணியுடன் தனது கடைசி லீக் ஆட்டத்தில் விளையாட உள்ளது.

அதில் வெற்றி பெற்றால் மட்டுமே இந்திய அணி அரையிறுதிக்குள் நுழைய வாய்ப்பு கிட்டும்.

மோனிஷா

உக்ரைன் போர்: ரஷ்யாவின் வாக்னர் கூலிப்படையினர் 30,000 பேர் மரணம்!

கால்நடைகளுக்கு தீவனமாகும் கொத்தமல்லி: சிறப்பு மானியம் வழங்க கோரிக்கை!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1

Leave a Reply

Your email address will not be published.