19 வயது பையன்பா… கோலி வேண்டுமென்றே மோதியதாக குற்றச்சாட்டு!

Published On:

| By Kumaresan M

ஆஸ்திரேலிய வீரர் சாம் கொன்ஸ்டாஸ் தனது முதல் டெஸ்ட் போட்டியிலேயே அரைசதம் அடித்து சாதனை படைத்துள்ளார்.

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 4வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் இன்று (டிசம்பர் 26) தொடங்கியுள்ளது. டாஸில் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட் செய்தது. 19 வயதே நிரம்பிய அறிமுக வீரரான சாம் கொன்ஸ்டாஸ் மற்றும் உஸ்மான் கவாஜா தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.

அதிரடியில் மிரட்டிய சாம் கொன்ஸ்டாஸ் இந்திய வேகப்பந்து வீச்சாளர் பும்ராவின் ஓவரில் சிக்ஸர் அடித்தார். பும்ராவின் 4,483 பந்துகளுக்கு பிறகு அவரது பந்து சிக்சருக்கு பறந்துள்ளது. அறிமுக டெஸ்டில் அரைசதம் விளாசி மிரட்டினார். 65 பந்துகளை எதிர்கொண்ட சாம் கொன்ஸ்டாஸ் 2 சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் 60 ரன்களுடன் எடுத்து ஜடேஜா ஓவரில் ஆட்டமிழந்தார்.

இந்த ஆட்டத்தின் போது, இந்திய பேட்ஸ்டேன் விராட் கோலி சாம் கொன்ஸ்டாஸுடன் வேண்டுமென்றே மோதியதாக கூறப்படுகிறது. இதனால், இருவருக்கும் இடையே வாக்குவாதம் நடந்தது. சாம் கொன்ஸ்டாஸின் தன்னம்பிக்கையை உடைக்கும் வகையில் கோலி நடந்து கொண்டதாக கிரிக்கெட் விமர்சகர்கள் கருதுகின்றனர். ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங்கும் வேண்டுமென்றே கோலி இந்த செயலில் ஈடுபட்டதாக கூறியுள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக, விராட் கோலிக்கு போட்டிக்கான ஊதியத்தில் 20 சதவிகிதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. பொதுவாக, கிரிக்கெட்டில் களத்தில் தேவையில்லாமல் பிசிக்கல் கான்டக்ட் செய்வது மிகுந்த குற்றத்தன்மை கொண்டதாக பார்க்கப்படுகிறது.

எம்.குமரேசன்

பாலியல் வன்கொடுமை… அண்ணா பல்கலை முன்பு அதிமுக சாலை மறியல்!

சென்னையில் இன்றும் நாளையும் மழை… பிரதீப் ஜான் தகவல்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share