டெஸ்ட் போட்டிகளுக்கான ஐசிசி தரவரிசையில் முதலிடம் பிடித்த இந்தியாவை பின்னுக்குத் தள்ளியது ஆஸ்திரேலியா.
இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலியா அணி 4போட்டிகள் கொண்ட பார்டர்-கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.
நாக்பூரில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 132ரன்கள் வித்தியாசத்தில் அபாரமான வெற்றியைப் பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் ஐசிசி டெஸ்ட் தரவரிசை பட்டியலில் இந்தியா 115புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து 111புள்ளிகளுடன் ஆஸ்திரேலியாவை பின்னுக்குத் தள்ளியது.
அதுமட்டுமின்றி ஏற்கனவே இந்திய அணி 114புள்ளிகளுடன் ஒருநாள் போட்டி மற்றும் 267புள்ளிகளுடன் டி20 போட்டிக்கான ஐசிசி தரவரிசையில் முதலிடத்தில் உள்ளது.
கிரிக்கெட் வரலாற்றில் ஒரே நேரத்தில் டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 என அனைத்து வடிவ போட்டிக்கான ஐசிசி தரவரிசையிலும் இந்திய அணி நம்பர் 1 இடத்தைப் பெறுவது இதுவே முதல் முறையாக இருந்தது. இதற்கு முன்பு 2014-ல் தென்னாப்பிரிக்க அணி ஒரே நேரத்தில் மூன்று வடிவங்களிலும் முதல் இடத்தில் இருந்தது.
இதனை ரசிகர்கள் பலரும் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து அவர்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வந்த நிலையில், ஐசிசி தரவரிசை பட்டியலில் மீண்டும் ஒரு அப்டேட் கொடுத்தது.
அதன்படி இந்தியா முதலிடத்தில் இருக்கிறது என்று தரவரிசை பட்டியலை வெளியிட்ட சில மணி நேரத்திலேயே இந்தியாவை பின்னுக்குத் தள்ளி ஆஸ்திரேலியா 126 புள்ளிகளுடன் முதலிடத்திலும் இந்தியா 115புள்ளிகளுடன் 2 ஆம் இடத்திலும் இருக்கின்றது.
இது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முதல் டெஸ்ட் போட்டியில் தோற்றாலும் ஆஸ்திரேலியா முதலிடத்தில் இருப்பதால் இந்திய அணி அடுத்தடுத்த டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்றால் மட்டுமே தரவரிசையில் முதலிடம் பிடிக்க முடியும்.
டெஸ்ட் தரவரிசையில் பின்னுக்கு தள்ளப்பட்டாலும், தொடர்ந்து டி20 மற்றும் ஒருநாள் தொடருக்கான தரவரிசையில் இந்தியா முதலிடத்தில் நீடித்து வருகிறது.
மோனிஷா
இந்திய எல்லையில் சீன துருப்புகள்: கூடுதலாக 9,400 வீரர்கள்!
பாகிஸ்தானில் உள்ள தூதரகத்தை மூடும் சீனா: காரணம் என்ன?