உலகக்கோப்பை 2023: 10 அணிகள்… ஒரு டிராபி… வெல்லப்போவது யார்?

Published On:

| By christopher

உலகில் உள்ள அனைத்து கிரிக்கெட் ரசிகர்களும் மிகவும் எதிர்பார்த்து காத்திருந்த 2023 ஒருநாள் உலகக்கோப்பை தொடர், வரும் அக்டோபர் 5 அன்று அகமதாபாத்தில் துவங்க உள்ளது. முதல் போட்டியில், நடப்பு சாம்பியனான இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதவுள்ளன.

இந்த கிரிக்கெட் திருவிழாவில், இந்தியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், இலங்கை, வங்கதேசம், தென் ஆப்ரிக்கா மற்றும் நெதர்லாந்து என 10 அணிகள் அந்த பிரம்மாண்ட கோப்பைக்காக மோதிக்கொள்ள உள்ளன.

நவம்பர் 12 வரை லீக் போட்டிகளும், நவம்பர் 15 அன்று முதல் அரையிறுதி ஆட்டமும், நவம்பர் 16 அன்று 2வது அரையிறுதி ஆட்டமும், இறுதியாக நவம்பர் 19 அன்று இந்த கிரிக்கெட் திருவிழாவின் இறுதிப்போட்டியும் நடைபெறவுள்ளன.

இந்த தொடரில் பங்கேற்கும் 10 அணியின் வீரர்கள் விவரம் இதோ!

இந்திய அணி: ரோகித் சர்மா, ஹர்திக் பாண்டியா, விராட் கோலி, சுப்மன் கில், ஷ்ரேயாஸ் அய்யர், கே.எல்.ராகுல், ரவீந்திர ஜடேஜா, ஷ்ரதூல் தாகூர், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், குல்தீப் யாதவ், முகமது ஷமி, ரவிச்சந்திரன் அஸ்வின், இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ்

இங்கிலாந்து அணி: ஜோஸ் பட்லர், பென் ஸ்டோக்ஸ், மோயீன் அலி,   ஜானி பேர்ஸ்டோ, தாவித் மலான், சாம் கர்ரன், லியம் லிவிங்ஸ்டன், ஜோ ரூட், ஹாரி புரூக், அதில் ரஷீத், ரீஸ் டாப்லி, டேவிட் வில்லி, மார்க் வுட், கிறிஸ் வோக்ஸ்

ஆஸ்திரேலிய அணி: பாட் கம்மின்ஸ், ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர், மிட்சல் ஸ்டார்க், ஜோஷ் ஹசில்வுட், கேமரூன் கிரீன், மர்னஸ் லபுசானே, டிராவிஸ் ஹெட், சீன் அபோட், மிட்சல் மார்ஷ், கிளென் மேக்ஸ்வெல், ஜோஷ் இங்கிலீஷ், ஆடம் ஜாம்பா

நியூசிலாந்து அணி: கேன் வில்லியம்சன், டேவன் கான்வே, டிரெண்ட் போல்ட், லாக்கி பெர்குசன், டிம் சவுதி, டாம் லாதம், மார்க் சாப்மன், மிட்சல் சான்ட்னர், ரச்சின் ரவிந்திரா, இஷ் சோதி, டெரில் மிட்சல், ஜிம்மி நீஷம், கிளென் பிலிப்ஸ்

பாகிஸ்தான் அணி: பாபர் அசாம், முகமது ரிஸ்வான், ஷாஹீன் அப்ரிதி, ஹாரிஸ் ராஃப், ஷதாப் கான், இமாம்-உல்-ஹக், பக்கர் ஜமான், இஃப்திகார் அகமது, அப்துல்லா சாபிக், சவுத் சகீல், முகமது நவாஸ், சல்மான் அலி, ஹசன் அலி, முகமது வாசிம், உசாமா மிர்

தென் ஆப்ரிக்க அணி: டெம்பா பவுமா, குவின்டன் டீ காக், டேவிட் மில்லர், ஹெய்யின்ரிச் கிளாசன், எய்டன் மார்க்ரம், ஜெரால்ட் கோட்சி, ரீசா ஹென்றிக்ஸ், மார்கோ ஜென்சன், கேசவ் மகராஜ், லுங்கி நேகிடி, ககிசோ ரபாடா, அடிலே பெலுக்வாயா, டப்ரிஷ் சம்ஷி, ராசி வென் டர் டுசன், லிசாத் வில்லியம்ஸ்

இலங்கை அணி: தசுன் சனகா, குசல் மென்டிஸ், பதும் நிசன்கா, குசல் பெரேரா, டிமுத் கருணரத்னே, லஹிரு குமாரா, சதீரா சமரவிக்ரமா, தனன்ஜியா டி சில்வா, மஹீஷ் தீக்சனா, சரித் அசலங்கா, மதீசா பதிரானா, டுணித் வெல்லலாகே, கசுன் ரஞ்சிதா, தில்ஷன் மதுசங்கா, துசன் ஹேமந்தா

வங்கதேச அணி: ஷகிப் அல் ஹசன், நஜ்முல் ஹுசைன் சான்டோ, முஷ்ஃபிகூர் ரஹ்மான், மெஹ்தி ஹசன் மிராஸ், லிடன் தாஸ், தஸ்கின் அகமது, முஷ்டஃபிசூர் ரஹ்மான், தன்சித் ஹசன் தமீம், தவ்ஹித் ஹ்ரிதாய், முகமதுல்லா ரியாத், நசும் அகமது, ஷக் மேஹேதி ஹசன், ஹசன் முகமது, ஷொரிஃபுல் இஸ்லாம், தன்சிம் ஹசன் சகிப்

ஆப்கான் அணி: ஹாஷ்மதுல்லா ஷஹீதி, ரஹ்மனுல்லா குர்பாஸ், நஜிபுல்லா ஜத்ரான், இப்ராஹிம் ஜத்ரான், ரியாஸ் ஹசன், முகமது நபி, ரஷீத் கான், முஜீப் உர் ரஹ்மான், நூர் அகமது, ஃபசல் ஹக் பாரூகி, நவீன் உல் ஹக், ரஹ்மத் ஷா, இக்ராம் அலிகில், அஷ்மதுல்லா ஒமர்சாய், அப்துல் ரஹ்மான்

3 major weaknesses in the Netherlands' 2023 World Cup squad

நெதர்லாந்து அணி: ஸ்காட் எட்வர்ட்ஸ், மேக்ஸ் ஓ’டவுட், விக்ரம் சிங், பஸ் டி லீட், பால் வென் மீகேரன், தேஜா நிதமனுரு, காலின் அகர்மன், லோகன் வன் பீக், ரோயில்லோஃப் வன் டெர் மெர்வே, ஆர்யன் தத், ரயன் கிலைன், வெஸ்லே பெர்ரேசி, சாகிப் ஜுல்ஃபிகர், ஷரிஸ் அகமது, சைபிரன்ட் எங்கல்பிரேச்ட்

முரளி

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ரஜினியின் “தலைவர் 170” பட ஹீரோயின்ஸ்!

ஆளுநர் ஆர்.ரவியின் புதிய செயலாளர் நியமனம்!