ஐசிசி 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான எதிர்பார்ப்பு தற்போதே ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
அதன்படி, 13 வது உலகக்கோப்பை 50 ஓவர் கிரிக்கெட் தொடரில் 10 அணிகள் பங்கேற்கின்றன. இந்த போட்டிகள் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் வரும் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் நடைபெற உள்ளது.
இந்த தொடரில் பங்குபெறுவதற்கான தகுதியை இந்தியா ஏற்கனவே பெற்று விட்டது. அதே நேரத்தில் ஆப்கானிஸ்தான், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, பங்களாதேஷ், நியூசிலாந்து, பாகிஸ்தான் மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகளும் ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை சூப்பர் லீக் மூலம் நேரடியாக தகுதி பெற்றுள்ளன.
இந்நிலையில், இந்த தொடருக்கான அட்டவணையை பிசிசிஐ மற்றும் ஐசிசி இணைந்து, மும்பையில் உள்ள செயின்ட் ரெஜிஸ் ஹோட்டலில் வரும் ஜூன் 27 ஆம்தேதி காலை 11.30 மணிக்கு வெளியிட உள்ளது.
இதனிடையே பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தங்களுக்கான போட்டி நடைபெறும் இரண்டு இடங்களை மாற்றும்படி ஐசிசியிடம் கோரிக்கை வைத்ததும் அந்த கோரிக்கையை ஐசிசி ஏற்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
மு.வா.ஜெகதீஸ் குமார்
மின்கட்டண உயர்வு…வீடுகளுக்கு பொருந்தாது!
மணிப்பூருக்கு அனைத்து கட்சி குழுவை அனுப்ப வேண்டும்: திருச்சி சிவா