அடுத்தாண்டு U19 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரை இலங்கை நடத்த இருந்த நிலையில், தற்போது மாற்றம் செய்து ஐசிசி அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக இந்தியாவில் நடைபெற்ற ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை தொடர் வெகு விமரிசையாக நடந்து முடிந்தது. இறுதிப்போட்டியில் இந்திய அணியை வீழ்த்தி ஆஸ்திரேலியா அணி 6வது முறையாக கோப்பையை கைப்பற்றி நாடு திரும்பியது.
அதேவேளையில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, அண்டை நாடுகளான இலங்கை, பாகிஸ்தான், வங்கதேசம் உள்ளிட்ட முக்கிய அணிகள் லீக் போட்டியுடன் பரிதாபமாக வெளியேறின.
குறிப்பாக உலகக்கோப்பையில் விளையாடிய 9ல் 7 போட்டிகளில் தோல்வியை தழுவிய இலங்கை அணி புள்ளிப்பட்டியலில் 9வது இடம்பிடித்தது.
இதனையடுத்து வீரர்கள் தேர்வில் அரசாங்க தலையீடு மற்றும் கடமைகளை மீறியதற்காக இலங்கை கிரிக்கெட் வாரியத்தை உறுப்பினர் பொறுப்பில் இருந்து சமீபத்தில் சஸ்பெண்ட் செய்தது ஐசிசி.
இந்த நிலையில் இலங்கையில் 2024ஆம் ஆண்டு ஜனவரியில் நடைபெற இருந்த 15வது U19 ஆடவர் கிரிக்கெட் உலகக் கோப்பை தற்போது இடம் மாற்றப்பட்டுள்ளது.
உறுப்பினர் பதவியில் இருந்து இலங்கை கிரிக்கெட் வாரியம் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள நிலையில், ஐசிசி போட்டி நடத்த நிதியுதவி அளிக்க முடியாது.
அதன் காரணமாக அடுத்தாண்டு குறிப்பிட்ட தேதியில் U19 கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டியானது தற்போது தென்னாப்பிரிக்கா நாட்டில் நடைபெறும் என்று ஐசிசி இன்று அறிவித்துள்ளது.
கடந்த ஆண்டு மேற்கிந்தியத் தீவுகளில் நடந்த U19 கிரிக்கெட் உலகக் கோப்பையில் ஐந்தாவது முறையாக இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வென்றது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
சர்ச்சை பேச்சு: நடிகர் மன்சூர் அலிகான் மீது பாய்ந்தது வழக்கு!
டிஜிட்டல் திண்ணை: அமைச்சர் துரைமுருகனுக்கு அமலாக்கத்துறை சம்மன்… மொத்தமும் கொட்டிய முத்தையா?