குவாட்டாவில் குண்டுவெடிப்பு… 24 பேர் பலி… சாம்பியன்ஸ் டிராபிக்கு சிக்கல்!

விளையாட்டு

உலகின் சிறந்த 8 அணிகள் பங்கேற்க உள்ள  சாம்பியன்ஸ் டிராபி தொடர் 2025 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 19-ஆம் தேதி துவங்கி மார்ச் 9 அன்று முடிவடையும் வகையில் உத்தேச அட்டவணை தயார் செய்யப்பட்டுள்ளது. கராச்சி, லாகூர் , ராவல் பிண்டி நகரங்களில் இந்த போட்டிகள் நடைபெறுகின்றன.

இந்திய அணி விளையாடும் போட்டிகள் அனைத்தும் இந்திய எல்லைக்கு அருகில் உள்ள லாகூரில் நடைபெறும் வகையில் அட்டவணை வெளியிடப்பட திட்டமிட்டுள்ளது.

ஆனால், அப்படியும் பாகிஸ்தானில் நடக்கும் சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் இந்திய அணியை பங்கேற்க மத்திய அரசு அனுமதிக்கவில்லை . இந்திய அணி பாகிஸ்தான் சென்று விளையாடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், இது தொடர்பாக தங்களுக்கு எந்த அதிகாரப்பூர்வ மெயிலும் பி.சி.சி.ஐ- யிடத்தில் இருந்து வரவில்லை என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

இத்தகைய குழப்பத்துக்கிடையே, பாகிஸ்தானில் குவாட்டா நகரில் இருந்து பெஷாவர் செல்ல தயாராக இருந்த ரயிலில் குண்டு வெடித்தது. இதில், 24 பேர் இறந்து போயுள்ளனர். 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். ராணுவ பயிற்சி மையத்தில் இருந்து புறப்பட்டு சென்ற ராணுவ வீரர்களை குறி வைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிகிறது.

சாம்பியன்ஸ் டிராபி நெருங்கி வரும் வேளையில் பாகிஸ்தானில் இது போன்று தீவிரவாத சம்பவங்கள் நடப்பதால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் பதறிப் போய் உள்ளது.

பாதுகாப்பை காரணம் காட்டி இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற ஒரு அணி பாகிஸ்தான் வர மறுத்தாலும் போட்டியை வேறு நாடுகளுக்கு மாற்ற வேண்டிய சூழல் உருவாகி விடும்.

ஏற்கனவே இந்திய அணியும் பாகிஸ்தானில் விளையாட தயாராக இல்லை. இதனால்,என்ன செய்வதென்று தெரியாமல் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் குழம்பி போய் கிடக்கிறது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

எம்.குமரேசன்

 குரூப் 2, 2A கூடுதல் காலி பணியிடங்கள்… மாணவர்கள் மகிழ்ச்சி!

ஆர்.ஜே.பாலாஜியின் ‘சொர்க்கவாசல்’ ! : ரிலீஸ் தேதி அறிவிப்பு

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *