இன்னும் சில வருடங்கள்… மனம் திறந்த தோனி… மகிழ்ச்சியில் மஞ்சள் படை!

விளையாட்டு

சென்னை அணியின் முன்னாள் கேப்டன் இன்னும் சில வருடங்கள் விளையாடுவேன் என்று பேட்டி ஒன்றில் கூறியிருப்பது சென்னை அணியின் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.

ஐ.பி.எல் தொடரின் மெகா ஏலம் விரைவில் நடைபெறவுள்ளது. இதற்கிடையே, சென்னை அணியின் கேப்டன் தோனி 2025 ஆம் ஆண்டு ஐ.பி.எல் தொடரில் விளையாடுவாரா? என்கிற கேள்வியும் எழுந்துள்ளது. புதிய ஐ.பி.எல். விதிப்படி சர்வதேச போட்டிகளில் 5 ஆண்டுகள் வரை விளையாடாத   தோனியை  அன்கேப்டு வீரர்கள் வரிசையில் சென்னை அணி 4 கோடிக்கு வாங்கிக் கொள்ள முடியும்.

ஆனால், இது தொடர்பாக சென்னை அணி நிர்வாகிகள் தோனியை சந்தித்து பேச நேரம் கேட்டும் அவர் நேரம் கொடுக்கவில்லை. நடப்பு ஐ.பி.எல் தொடரின் ஏலத்துக்கு முன்னதாக எந்த எந்த வீரர்களை தக்க வைக்க போகிறோம் என்கிற பட்டியலை பி.சி.சி.ஐ.யிடத்தில் அணி நிர்வாகங்கள் அக்டோபர் 31 ஆம் தேதிக்குள் கொடுக்க வேண்டும்.

தற்போது, ஐ.பி.எல் தொடரில் 10 அணிகள் பங்கேற்கின்றன. இதில், ஒவ்வொரு அணியும் 6 வீரர்களை தக்க வைத்துக் கொள்ளலாம். மற்றவர்கள் ஏலத்தில் விடப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு அணி ரூ.120 கோடி செலவழித்து வீரர்களை ஏலம் எடுக்க முடியும். இது கடந்த ஏலத்தை விட ரூ.20 கோடி அதிகமாகும்.

இந்த நிலையில், சென்னை அணியின் கேப்டன் தோனி தான் விளம்பர தூதுவராகவுள்ள  ரிஜி என்ற சாப்ட்வேர் அறிமுக விழாவில் கலந்து கொண்டார். அப்போது, அவர் செய்தியாளர்களிடத்தில் பேசுகையில்,’ 43 வயதாகும் என்னால்  இன்னொரு சீசன் ஐ.பி.எல் போட்டியில்  விளையாட முடியுமா? என்று பலரும் கேள்வி எழுப்புகின்றனர்.

இன்னும் சில வருடங்கள் நான் விளையாட விரும்புகிறேன். கடந்த 9 மாதங்களாக பிட்டாக என்னை நான் வைத்து கொண்டிருக்கிறேன். எனவே இரண்டரை மாதங்கள் ஐ.பி.எல். விளையாடுவது ஒன்றும் கடினமான காரியம் இல்லை. இதற்கு  திட்டமிட்டு பணியாற்ற வேண்டும். இன்னும் சில வருடங்கள் கிரிக்கெட்டை அனுபவித்து விளையாட விரும்புகிறேன் ‘என்று தெரிவித்துள்ளார்.

எனவே , 43 வயதாகும் தோனி வரும் 2025 மெகா ஏலத்துக்கு பிறகு 3 வருடங்கள் முழுமையாக விளையாட வாய்ப்புள்ளதாக கருதி அவரின் ரசிகர்களும், சென்னை ரசிகர்களும் உற்சாகமடைந்துள்ளனர்.

தற்போது , சென்னை அணியின் கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் உள்ளார். எனினும், தோனி சென்னை அணியின் முக்கிய அங்கமாகவே பார்க்கப்படுகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

எம்.குமரேசன்

 த.வெ.க மாநாடு… ஸ்பெயினில் இருந்து திடீரென சென்னை திரும்பிய திரிஷா

அச்சு அசல் ஐஸ்வர்யா போல உள்ள பெண்… யார் இவர்?

+1
0
+1
3
+1
0
+1
4
+1
0
+1
0
+1
2

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *