டி20 உலகக் கோப்பை: இறுதிப் போட்டியில் யார் யார்? கிரிஸ் கெயில் கணிப்பு!

டி20 உலகக் கோப்பை ஆஸ்திரேலியாவில் வரும் அக்டோபர் 16 ஆம் தேதி தொடங்கி நவம்பர் 13 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

இந்த தொடரில் மொத்தம் 16 அணிகள் பங்கேற்று விளையாடுவதால் கோப்பையை கைப்பற்றி சாம்பியன் பட்டம் வெல்லப்போவது யார் என்பது குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

எதிர்வரும் இந்த டி20 உலக கோப்பை தொடரில் சிறப்பாக விளையாடப் போகும் பேட்ஸ்மேன்கள் யார்? சிறப்பாக பந்துவீசப்போகும் பவுலர்கள் யார்? எந்த அணி கோப்பையை வெல்லும் என்பது குறித்த பல்வேறு கருத்துக்களை முன்னாள் வீரர்கள் தெரிவித்து வருகின்றார்.

இரு அணிகள் மோதும்

அந்த வகையில் தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி ஆட்டக்காரரான கிரிஸ் கெயில் இந்த டி20 உலககோப்பையின் இறுதிப் போட்டியில் விளையாடப் போகும் அணிகள் எது என்பது குறித்த தனது கருத்தினை கூறியுள்ளார்.

தனது அதிகாரபூர்வ யு ட்யூபில் தொடர்ந்து கிரிக்கெட் பற்றி பேசி வரும் கிரிஸ் கெயில் அக்டோபர் 10 ஆம் தேதி இதுபற்றி பேசியுள்ளார்.

“இந்த டி20 உலக கோப்பை தொடரின் இறுதி போட்டியில் நிச்சயம் ஆஸ்திரேலியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் என்று நினைக்கிறேன்.

i think there could be final between chris gayle bold prediction

வெஸ்ட் இண்டீஸ் அணியில் தற்போது பொல்லார்டு, ரசல், பிராவோ ஆகியோர் இல்லாததால் கேப்டனுக்கு சற்று சவாலாக தான் இருக்கும்.

ஆனாலும் அணியில் உள்ள இளம் வீரர்கள் நிச்சயம் தங்களது சிறப்பான ஆட்டத்தை இந்த தொடரில் வெளிப்படுத்த முயற்சிப்பார்கள்.

அப்படி இந்த தொடரில் அனைவரும் ஜொலிக்க ஆரம்பித்தால் அவர்களால் எந்த ஒரு எதிரணியையும் வீழ்த்த முடியும்.

கோப்பையை வெல்ல முடியும்

இந்த தொடரில் வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் சூழ்நிலையை சமாளித்து மைதானத்திற்கு ஏற்றார் போல் விளையாட ஆரம்பித்தால் நிச்சயம் கோப்பையை வெல்லும் அளவிற்கு கூட அவரிடம் திறமை உள்ளது” என கூறியுள்ளார்.

ஆனால், கிரிக்கெட் ரசிகர்களோ உங்கள் அணி இன்னும் சூப்பர் 12 சுற்றுக்கு கூட தகுதி பெற வில்லை அதற்குள் இறுதி போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் விளையாடும் என்பது ரொம்ப ஓவர் என்று கமென்ட்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.

மு.வா.ஜெகதீஸ் குமார்

கொடநாடு வழக்கு : ஆவணங்கள் சிபிசிஐடியிடம் ஒப்படைப்பு!

‘விக்ரம் வேதா’ ஸ்டைலில் இஷான் கிஷானை வாழ்த்திய சுப்மான் கில்

[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]

Similar Posts