‘அமைதியாக இருக்க முடியாமல் தவித்தேன்’- செஸ் இறுதிப் போட்டி குறித்து குகேஷ்

Published On:

| By Kumaresan M

சமீபத்தில் இந்திய செஸ் வீரர் குகேஷ் உலகச் சாம்பியன் ஆனார். இதன் மூலம் ரூ.11.45 கோடியை பரிசாக பெற்றார்.

ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அளித்தள்ள பேட்டியில் குகேஷ் கூறியிருப்பதாவது, “சிறுவயது முதலே செஸ் ஆட்டத்தை என்ஜாய் செய்து விளையாடி வருகிறேன். என்ஜாய் செய்து விளையாடவில்லையென்றால், செஸ் விளையாடுவதில் அர்த்தம் இல்லை. செஸ் அழகான ஒரு விளையாட்டு. அதில், இருந்து நாம் நிறைய கற்றுக் கொள்ளலாம்.

உலக செஸ் போட்டி 14 நாட்கள் தொடர்ந்து நடைபெறும். இடையில் ஓய்வு இருந்தாலும் அதிக பிரஷ்ஷரை என்னிடத்தில் பார்க்க முடிந்தது.

ஒரே போட்டியாளரிடத்தில் இருந்து 14 நாட்கள் போராடுவது கடும் அழுத்தத்தை தந்தது. மனதை அமைதிபடுத்த முடியாமல் தவித்தேன். உலக செஸ் போட்டி மற்றதில் இருந்த வேறு பட்டது.

ஒரே போட்டியாளரை ஒவ்வொரு நாளும் எதிர்கொள்வதால் மனதையும் மூளையையும் கட்டுப்படுத்துவது சவாலாக இருந்தது. 9-வது ரவுண்டில் நான் முடிந்து போவேன் என்று நினைத்தேன். ஆனால், தப்பித்தேன்.

12-வது ரவுண்டில் தோற்றது பெரிய பின்னடைவாக இருந்தது. இதனால், பதட்டமானேன். ஆனால், அடுத்த இரு சுற்றுகளில் எனது நுணுக்கத்தை மாற்றியது வெற்றிக்கு வித்திட்டது. நான் மிகப் பெரிய திறமைசாலியுடன் போட்டியிட்டேன் என்பதும் மறக்க முடியாதது” என்று தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, “அடுத்த உலக செஸ் சாம்பியனுக்கான போட்டியில் இறுதி ஆட்டத்தில் இந்தியர்களே மோதுவார்கள் என்று விஸ்வநாதன் ஆனந்த் கணித்துள்ளார். ‘பிரக்யானந்தா, அர்ஜுன் ஆகியோர் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

எனவே, அடுத்த செஸ் உலகச் சாம்பியனுக்கான இறுதிப் போட்டியில் குகேசுடன், பிரக்யானந்தா அல்லது அர்ஜுன் மோத வாய்ப்புள்ளது. அப்படி ஒன்று நடந்தால் எனது கனவு நனவாகி விட்டது என்றே அர்த்தம்” என்று ஆனந்த் தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

-எம்.குமரேசன்

மக்களவை செயலகம் வெளியிட்ட காலண்டர்… காந்தி, அம்பேத்கர் படம் மிஸ்ஸிங்!

காட்டுக்குள் நின்ற காருக்குள் 52 கிலோ தங்கம், 9 கோடி கேஷ்… அதிர்ச்சியில் உறைந்த அதிகாரிகள்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share