சாம்பியன்ஸ் டிராபி: பாகிஸ்தானுக்கு இந்தியா வர வீரர் எதிர்ப்பு!

Published On:

| By Kumaresan M

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாடுவதற்காக இந்திய அணி பாகிஸ்தானுக்கு வரக் கூடாது என்று பாகிஸ்தான் முன்னாள் வீரர் டானீஷ் கனேரியா கூறியுள்ளார்.

வரும் 2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் பிப்ரவரி 19 முதல் மார்ச் 9 வரை பாகிஸ்தானில் நடக்கவுள்ளது. அட்டவணை சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில், இந்திய அணி விளையாடும் போட்டிகள் லாகூர் மைதானத்தில் நடத்தப்படுவதாக தெரிகிறது. எனினும் பாகிஸ்தானுக்கு பயணித்து இந்தியா அணி விளையாடுமா என்கிற சந்தேகம் நிலவுகிறது.

2008ஆம் ஆண்டுக்கு மும்பை தாக்குதலுக்கு பிறகு, இந்திய அணி ஒருமுறை கூட பாகிஸ்தான் சென்று  கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்கவில்லை.

இந்த நிலையில் சாம்பியன்ஸ் டிராபி தொடர் குறித்து பாகிஸ்தான் முன்னாள் வீரர் கனேரியா பேசுகையில், பாகிஸ்தானிலுள்ள சூழலை பார்க்கும் போது, இந்திய அணி வீரர்கள் பாகிஸ்தானுக்கு வந்து விளையாட கூடாது. வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் போது வீரர்களின் பாதுகாப்பு தான் முக்கியம். வீரர்களுக்கான மரியாதையும் முக்கியம்.

பிசிசிஐ இந்த விவகாரத்தில் மிகச்சிறப்பாக செயல்பட்டு வருகிறது.இந்திய அணி பாகிஸ்தானுக்கு வரும் பட்சத்தில், அதிகப்படியான பணம் பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டுக்கு கிடைக்கும். அதைதான் பாகிஸ்தான் போர்டும் எதிர்பார்க்கிறது. ஸ்பான்சர்ஷிப், தொலைக்காட்சி உரிமம் உள்ளிட்டவைகளில் அதிக பணம் கிடைக்கும்.

ஆனால் பாகிஸ்தான் கிரிக்கெட்டிலும், பாகிஸ்தானிலும் உள்ள பிரச்சனைகளை  தீர்க்காமல் இந்திய அணி அங்கு வருவது சரியாக இருக்காது என்று தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் அணியில் இடம் பெற்று விளையாடிய ஒரே இந்து வீரர் டானீஷ் கனேரியா என்பது குறிப்பிடத்தக்து

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

எம்.குமரேசன்

யோகிபாபுவிடம் அப்படி நடந்தாரா அஜித்? – உண்மையை உடைக்கும் பத்திரிகையாளர்

பொன் மாணிக்கவேலுக்கு முன்ஜாமீன்… உயர்நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share