I Didn’t Remove Virat Kohli From Captaincy
2021 டி20 உலகக்கோப்பையில், இந்திய அணி அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெறாமல், லீக் சுற்றிலேயே வெளியேறிய நிலையில், இந்திய அணியின் டி20 கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவதாக விராட் கோலி அறிவித்தார். இதை தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகள் வெடித்தன.
டி20 கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்த ஒரு சில வாரங்களிலேயே இந்தியாவின் ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணிகளுக்கான கேப்டன் பொறுப்பில் இருந்தும் விலகுவதாக விராட் கோலி அறிவித்து அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.
கோலி பேச்சால் பரபரப்பு!
இந்த அறிவிப்பு பெரும் சர்ச்சையாக வெடித்த நிலையில், “நான் ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணிகளின் கேப்டன் பொறுப்பில் தொடரவே விரும்பினேன்” என விராட் கோலி தெரிவிக்க அது பூதாகரமானது.
இதை தொடர்ந்து, அனைத்து விதமான ஆட்டங்களுக்கு, இந்திய அணியின் புதிய கேப்டனாக ரோகித் சர்மா நியமிக்கப்பட்டார்.
அப்போது ’இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக இருந்த சவுரவ் கங்குலியே விராட் கோலி கேப்டன் பதிவியில் இருந்து விலகுவதற்கு காரணம்’ என தகவல்கள் வெளியாகி பெரும் விவாதங்களை ஏற்படுத்தின.
விராட்கோலி தான் உறுதியாக இருந்தார்!
இந்நிலையில், இது குறித்து தற்போது விளக்கம் அளித்துள்ள சவுரவ் கங்குலி, “நான் விராட் கோலியை கேப்டன் பதவியில் இருந்து விலக்கவில்லை” என தெரிவித்துள்ளார்.
இது குறித்து மேலும் பேசிய அவர், “நான் அவரிடம் இது குறித்து பலமுறை பேசினேன். ஆனால், விராட் கோலி டி20 அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவதில் உறுதியாக இருந்தார்.
டி20 கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவதாக இருந்தால், ஒருநாள் கேப்டன் பொறுப்பில் இருந்தும் விலக்குவதே நன்றாக இருக்கும்.
டி20, ஒருநாள் போட்டிகளுக்கு தனி கேப்டன், டெஸ்ட் போட்டிகளுக்கு தனி கேப்டன் என்று இருக்கட்டும்’ என நான் அவரிடம் கூறினேன்” என தெரிவித்துள்ளார்.
ரோகித்தும் தயாராக இல்லை
கோலி பதவி விலகலுக்குப் பிறகு, ரோகித் சர்மா இந்திய கேப்டனாக அறிவிக்கப்பட்டது குறித்து பேசிய கங்குலி,
“ரோகித் சர்மா அனைத்து விதமான ஆட்டங்களுக்கும் கேப்டனாக பொறுப்பேற்க தயாராக இல்லை.
அதனால், அனைத்து விதமான போட்டிகளுக்கும் கேப்டனாக பொறுப்பேற்றுக்கொள்ளும்படி ரோகித் சர்மாவுக்கு நான் சிறு உந்துதல் கொடுத்தேன்” என தெரிவித்துள்ளார்.
மொத்தம் 68 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியை வழிநடத்திய விராட் கோலி, அதில் 40 போட்டிகளில் வெற்றியை தேடித்தந்துள்ளார்.
மேலும், இதன்மூலம் இந்திய அணியின் வெற்றிகரமான டெஸ்ட் கேப்டன் என்ற பெருமையையும் விராட் கோலி பெற்றுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மகிழ்
திமுக எம்.பி செந்தில்குமார் சர்ச்சை கருத்து… கண்டித்த முதல்வர் ஸ்டாலின்
பியூட்டி டிப்ஸ்: அந்தரங்கப் பகுதிகளில் அரிப்பு… தீர்வு என்ன?
வெள்ள பாதிப்பு நிவாரணமாக ரூ.5,060 கோடி வழங்க முதல்வர் கடிதம்!
I Didn’t Remove Virat Kohli From Captaincy