இந்திய அணியில் சேவாக்கிற்கு கிடைத்த சுதந்திரம் எனக்கு கிடைக்கவில்லை என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் முரளி விஜய் தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் முரளி விஜய் தனது கிரிக்கெட் வாழ்க்கையைப் பற்றி மனம் திறந்துள்ளார். கடைசியாக கடந்த 2018-ஆம் ஆண்டு இந்திய அணிக்காக விளையாடிய முரளி விஜய்க்கு அதன் பிறகு அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை.
இந்தநிலையில், வீரேந்தர் சேவாக்கை ஆதரித்த விதத்தில் இந்திய அணி நிர்வாகம் அவருக்கு ஆதரவளித்திருந்தால் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருப்பதாகத் தெரிவித்துள்ளார்

ஸ்போர்ட்ஸ் ஸ்டார் தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில் “இந்திய அணியில் சேவாக்கிற்கு கிடைத்த சுதந்திரம் எனக்கு கிடைக்கவில்லை. அவருக்கு கிடைத்தது போன்ற ஆதரவு எனக்கு கிடைத்திருந்தால் நானும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருப்பேன். அணியின் தரப்பில் ஆதரவு கிடைத்தால் மட்டுமே சர்வதேச அளவில் எனது பங்களிப்பை அளிக்க முடியும். ஆனால் எனக்கு அவ்வாறு தொடர்ச்சியான வாய்ப்புகள் அமையவில்லை.
சேவாக்கிற்கு அணியில் விளையாட தொடர்ச்சியான வாய்ப்புகள் கிடைத்ததால் அவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் அவரைப் போல் வேறு யாரும் விளையாட முடியவில்லை. இந்திய கிரிக்கெட்டுக்காக அவர் செய்த செயல் ஆச்சரியமானது. அவர் என்னுடன் மிகவும் எளிமையாக பழகக்கூடியவர்.” என்று தெரிவித்துள்ளார்.
செல்வம்
நெல்லையில் சர்ச் அருகே வெடித்த மர்ம பொருள்: காவல்துறை விசாரணை!