ஐபிஎல் ஏலம்: நொந்து போன சந்தீப் ஷர்மா

விளையாட்டு

ஐபிஎல் ஏலத்தில் தன்னை எந்த அணியும் விலைக்கு வாங்காததால் தாம் மிகவும் ஏமாற்றமடைந்ததாக இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் சந்தீப் ஷர்மா தெரிவித்துள்ளார்.

2023-ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் மினி ஏலம் கடந்த டிசம்பர் 23-ஆம் தேதி, கேரள மாநிலம் கொச்சியில் நடைபெற்றது. இந்த ஏலத்தில் இங்கிலாந்து வீரர் சாம் கர்ரன் இதுவரை ஐபிஎல் ஏல வரலாற்றில் இல்லாத வகையில் 18.5 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டு சாதனை நிகழ்த்தினார். அவரை தொடர்ந்து பென் ஸ்டோக்ஸ், கேமரூன் கிரீன், ஹாரி புரூக்ஸ், மாயங்க் அகர்வால் உள்ளிட்ட வீரர்கள் அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்டனர்.

இந்த ஏலத்தில் டேவிட் மாலன், டேரி மிட்சல், முஜீப் உர் ரகுமான், ஜேம்ஸ் நீஷம், முகமது நபி, சந்தீப் ஷர்மா உள்ளிட்ட வீரர்களை எந்த அணியும் ஏலத்தில் எடுக்காதது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியது.

இந்தநிலையில், பஞ்சாப், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்காக விளையாடிய வேகப்பந்து வீச்சாளர் சந்தீப் ஷர்மாவிற்கு மினி ஏலத்தில் அடிப்படை விலையாக ரூ.50 லட்சம் நிர்ணயம் செய்யப்பட்டது. ஆனால் அவரை எந்த அணியும் விலைக்கு வாங்க முன்வரவில்லை.

இதுகுறித்து சந்தீப் ஷர்மா கூறுகையில், “என்னை எந்த அணியும் ஐபிஎல் ஏலத்தில் வாங்காது குறித்து நான் மிகுந்த அதிர்ச்சியும் ஏமாற்றமும் அடைந்தேன். என்னை ஏன் எந்த அணியும் வாங்கவில்லை என்று எனக்கு தெரியவில்லை.

நான் இதுவரை விளையாடிய அணிகளில் எனது சிறப்பான பங்களிப்பை அளித்துள்ளேன். அதில் சில அணிகள் என்னை ஏலம் எடுக்கும் என்று நான் உண்மையிலேயே நினைத்திருந்தேன். நிச்சயமாக நான் இதை எதிர்பார்க்கவில்லை.

எங்கே தவறு நேர்ந்தது என்று எனக்கு தெரியவில்லை. உள்ளூர் கிரிக்கெட்டில் நான் நன்றாக விளையாடி வருகிறேன். ரஞ்சி கோப்பையின் கடைசி சுற்றில் ஏழு விக்கெட்டுகளை வீழ்த்தினேன். சையது முஷ்டாக் அலி கோப்பையிலும் நான் என்னுடைய ஆட்டத்தை சிறப்பாக வெளிப்படுத்தினேன். எப்பொழுதும் நான் எனது பந்து வீச்சில் நிலையாக இருக்கிறேன். அது மட்டும் தான் எனது கைகளில் உள்ளது. அணி நிர்வாகிகள் தேர்ந்தெடுப்பதை என்னால் கட்டுப்படுத்த முடியாது. வாய்ப்பு வந்தால் நல்லது. இல்லையென்றால் தொடர்ந்து நான் என்னுடைய ஆட்டத்தை விளையாடுவேன்.” என்றார்.

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் மிக முக்கியமான பந்து வீச்சாளராக அறியப்படும் நபர்களில் ஒருவரான சந்தீப் ஷர்மா, எந்த அணிக்காக விளையாடினாலும் பவர்பிளேயில் விக்கெட்டுகளை வீழ்த்தி எதிரணிக்கு அதிர்ச்சி கொடுப்பார். ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் ஒரு இன்னிங்ஸ் விகிதத்தை பொறுத்தவரை 1.09 விக்கெட்டுகளுடன், ஆல் டைம் பட்டியலில் 7-ஆவது இடத்தில் சந்தீப் ஷர்மா உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

செல்வம்

ரோகித் சர்மா எனக்கு அண்ணன் மாதிரி: நெகிழ்ந்த சூர்யகுமார்

கால்பந்து இறுதிப்போட்டியில் தவறு செய்து விட்டேன்: ஒப்புக்கொண்ட நடுவர்!

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
1
+1
0

Leave a Reply

Your email address will not be published.