தோனிக்கு அடுத்து நான் தான்: ஹர்திக் பாண்டியாவை சாடும் ரசிகர்கள்!

விளையாட்டு

பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங் என அனைத்திலும் கலக்கி வருகிறார் இந்திய டி20 கிரிக்கெட் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா.

மேலும் புதிய கேப்டனாகவும் அணியை சிறப்பாக வழி நடத்துகிறார். அதே நேரம் இந்திய அணியின் அடுத்த தோனியே நான்தான்.

என்னை சுற்றியே இந்திய அணி இயங்கி வருகிறது என்பதைப் போல் இருக்கிறது ஹர்த்திக் பாண்டியாவின் பேட்டிகள், கிரிக்கெட்டில் எப்போதும் ஒரே ஒரு தோனிதான் என்று சமூக வலைதளங்களில் தோனி ரசிகர்கள் சாடி வருகின்றனர்.

நேற்று (பிப்ரவரி 1 ) நடைபெற்ற மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டியில் நியூசிலாந்து அணியை வென்றதுடன் டி20 தொடரையும் இந்திய அணி கைப்பற்றியது.

பின்னர் பேசிய ஹர்திக் பாண்டியா “நான் எப்போதுமே சிக்ஸர் அடிப்பதை மகிழ்ச்சியாக செய்வேன். அதுதான் என்னுடைய வாழ்க்கை. ஆனால் இப்போது நான் கொஞ்சம் மாறி விட்டேன் இப்போதெல்லாம் பார்ட்னர்ஷிப் மீது நம்பிக்கை வந்திருக்கிறது.

என்னுடன் விளையாடும் சக வீரர்களுக்கு நான் இருக்கிறேன் என்று அவர்களுக்கு உறுதி கொடுக்க நினைக்கிறேன். இப்போது உள்ள அணியில் அனைத்து வீரர்களை விட நான் தான் அதிக போட்டிகளில் விளையாடியிருக்கிறேன்.

நெருக்கடியை எப்படி சமாளிக்க வேண்டும்? எப்படி அமைதியாக விளையாட வேண்டும் என்பது குறித்து நான் கற்றுக் கொண்டுள்ளேன். இதனால் என்னுடைய ஸ்ட்ரைக் ரேட் கொஞ்சம் குறைந்து இருக்கிறது.

ஏனென்றால் நான் இப்போது புதிய பொறுப்பை எடுத்து அதை நோக்கி சென்று கொண்டிருக்கிறேன்.

புதிய பந்தை பயன்படுத்தும் பொறுப்பு கூட எனக்கு வேண்டும் என நினைக்கிறேன். ஏனென்றால் மற்ற யாரும் அந்த கடினமான பொறுப்பை ஏற்று செய்ய நான் விரும்பவில்லை.

என் அணிக்காக நான் முதன்மையாக இருக்க வேண்டும் என நினைக்கிறேன். புது பந்தில் எப்படி பந்து வீச வேண்டும் என்பது குறித்து பல யுத்திகளை கற்றுக் கொண்டுள்ளேன்.

பேட்டிங்கில் நான் கீழ் வரிசையில் இறங்குவது குறித்து நான் கவலைப்படவில்லை. ஏற்கனவே அந்தப் பணியை தோனி செய்து கொண்டிருந்தார். நான் அப்போது இளம் வீரராக இருந்தேன்.

அதனால் மைதானத்தின் அனைத்து பக்கமும் தூக்கி தூக்கி அடிப்பேன். ஆனால் இப்போது தோனி அணியில் இல்லை. இதனால் அனைத்து பொறுப்பும் என் மீது விழுந்து விட்டது.

இது குறித்து நான் கவலைப்படவில்லை. எங்களுக்கு தேவையான முடிவுகள் கிடைக்கிறது. இதனால் நான் மெதுவாக விளையாடுவது குறித்து கவலைப்படவில்லை என்று கூறினார்.

ஒரு புறம் சினிமாவில் அடுத்த சூப்பர் ஸ்டார் என்று யாரும் இல்லை ஒரே சூப்பர் ஸ்டார் தான் அது ரஜினி மட்டும் தான் என்று ரஜினி ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

அதே வேளையில் விஜய் தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என்று விஜய் ரசிகர்கள் கூறி வருவதும் சமூக வலைதளங்களில் விவாதங்கள் எழுந்து வரும் நிலையில் கிரிக்கெட்டிலும் அது தொடர்வதாக கருதுகின்றனர் நெட்டிசன்கள்.

மு.வா.ஜெகதீஸ் குமார்

தை வெள்ளியில் வெளியாகும் 7 படங்கள்!

கியாரா – சித்தார்த் ஜோடி திருமணம் : களைகட்டும் ஜெய்சால்மர் பேலஸ்!

+1
0
+1
3
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.