பாரிஸ் ஒலிம்பிக் துப்பாக்கிச் சுடுதல் பிரிவில் இரண்டு வெண்கல பதக்கங்களை வென்று இந்தியாவின் மனு பாக்கர் சாதனை படைத்தார்.
இதன் மூலம் ஒரே ஒலிம்பிக் தொடரில் இரண்டு பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை என்ற பெருமை மனு பாக்கருக்கு கிடைத்தது.
தற்போது மனு பாக்கர் தாயகம் திரும்பிய நிலையில், மூன்று மாதம் ஓய்வு எடுக்க உள்ளதாக தெரிகிறது. ஓய்வின்போது இளம் வீரர் வீராங்கனைகளுடன் தனது நேரத்தை செலவிட்டு தான் எப்படி ஒலிம்பிக் போட்டிக்கு தயாரான விதம், தனது ஒலிம்பிக் அனுபவம் குறித்தும் இளம் வீரர்களுடன் கலந்துரையாட மனுபாக்கர் முடிவு செய்திருந்தார்.
இந்த நிலையில், சென்னை முகப்பேரில் உள்ள வேலம்மாள் பள்ளி சார்பாக நடத்தப்பட்ட பாராட்டு விழாவில் மனு பாக்கர் பங்கேற்றார்.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற மனு பாக்கருக்கு ஏர் பிஸ்டல் பரிசாக வழங்கப்பட்டது. இதன்பிறகு மாணவர்களுடன் கலந்துரையாடிய அவரிடத்தில் தமிழக பிரபலங்களை பற்றி தெரியுமா ? என்கிற கேள்வி கேட்கப்பட்டது.
முதல்வர் ஸ்டாலினை தெரியுமா ? என கேட்டதற்கு தெரியாது என்று மனு பாக்கர் பதிலளித்தார் . செஸ் வீரர் பிரக்ஞானந்தாவை தெரியுமா என்று கேட்டதற்கு ஆம் தெரியும் என்று கூறினார். மூன்றாவதாக நடிகர் விஜய்யை தெரியுமா என்று கேட்கப்பபட, தான் அவருடைய ரசிகை என்று மனு பாக்கர் பதில் சொன்னார். இதனைத் தொடர்ந்து மாணவிகளுடன் பிகில் படத்தில் உள்ள ஒரு பாடலுக்கு மேடையில் நடனம் ஆடி அசத்தினார். மனுபாக்கரின் வருகையால் வேலம்மாள் பள்ளி மாணவ மாணவிகள் மகிழ்ச்சியில் திளைத்தனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்
12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு… மக்களே அலர்ட்!
கிருஷ்ணகிரி சிறுமி வன்கொடுமை: 15 நாளில் விசாரித்து முடிக்க ஸ்டாலின் உத்தரவு!