ஒலிம்பிக்கில் கிரிக்கெட் சேர்க்கப்பட காரணம் தெரியுமா? இ சாலா அணியின் முன்னாள் கேப்டன்தான்!

Published On:

| By Kumaresan M

கடந்த 1900-ஆம் ஆண்டில் முதல் ஒலிம்பிக் தொடரில் கிரிக்கெட் விளையாட்டு நடத்தப்பட்டது. அப்போது கிரேட் பிரிட்டன் மற்றும் ஃபிரான்ஸ் நாடுகள் ஒரே ஒரு ஆட்டத்தில் மோதின. இந்த ஆட்டத்தில் கிரேட் பிரிட்டன் வெற்றி பெற்று தங்கப்பதக்கத்தை கைப்பற்றியது. பிறகு, மற்ற நாடுகள் ஏதும் கிரிக்கெட் விளையாட்டில் பங்கேற்காததால் கிரிக்கெட் விளையாட்டு ஒலிம்பிக்கில் இருந்து நீக்கப்பட்டது.

இந்த காலக்கட்டத்தில் கிரிக்கெட் விளையாட்டு இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவில் மட்டுமே பிரபலமாக இருந்தது. அதன் பின்னரே இந்தியா, வெஸ்ட் இண்டீஸ், நியூசிலாந்து உள்ளிட்ட பிற நாடுகளில் கிரிக்கெட் பரவ தொடங்கியது.

1950-ஆம் ஆண்டுக்கு பிறகே, ஆசிய கண்டத்தில் கிரிக்கெட் பரவியது. மொத்தமே 10 நாடுகள் மட்டுமே தீவிரமாக கிரிக்கெட் ஆடி வந்தன. ஒலிம்பிக்கில் ஒரு விளையாட்டு சேர்க்கப்பட குறைந்தது 75 நாடுகளில் அந்த விளையாட்டு விளையாடப்பட வேண்டும் என்பது விதியாகும்.

 

ஆனால், டி20 போட்டிகள் வந்த பின்னர் அந்த நிலை மாறியது. இப்போது தீவிரமாக டி20 கிரிக்கெட் விளையாடும் நாடுகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், கிரிக்கெட்டை ஒலிம்பிக்கில் சேர்க்க சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தீவிர முயற்சி எடுத்தது. இன்ஸ்டாகிராமில் 31.5 கோடி ரசிகர்கள் விராட் கோலியை பின்தொடர்கிறார்கள். உலகிலேயே அதிக ரசிகர்களால் பின் தொடரப்படும் மூன்றாவது விளையாட்டு வீரர் என்ற பெருமை விராட் கோலிக்கு உண்டு.

கால்பந்து வீரர்கள் கிறிஸ்டியானோ ரொனால்டோ மற்றும் லியோனல் மெஸ்ஸி முதல் இரண்டு இடங்களில் இருக்கிறார்கள். அமெரிக்காவின் புகழ்பெற்ற விளையாட்டு வீரர்களான லெப்ரான் ஜேம்ஸ், டாம் பிராடி , டைகர் வுட்சை ஆகியோர் சேர்த்து வரும் எண்ணிக்கையை விட விராட்கோலியை இன்ஸ்டாவில் பின்பற்றுபவர்கள் அதிகம் ஆகும்.

விராட் கோலியின் புகழ்தான் ஒலிம்பிக் கவுன்சிலை கவர்ந்து லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் சேர்க்கப்பட காரணமாக இருந்துள்ளதாக ஒலிம்பிக் இயக்குநர் நிக்கோலோ காம்ப்ரியானி குறிப்பிட்டுள்ளார்.

தற்போதுள்ள நிலையில், உலகில் கால்பந்துக்கு அடுத்ததாக அதிக ரசிகர்கள் கொண்ட விளையாட்டாக கிரிக்கெட் உள்ளது. சுமார் 250 கோடி பேர் கிரிக்கெட்டுக்கு ரசிகர்களாக உள்ளனர். லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் போட்டியின் போது, விராட் கோலிக்கு 39 வயதாகி விடும். அதனால், அதில் விளையாடும் வாய்ப்பும் குறைவாகவேதான் உள்ளது.

-எம்.குமரேசன் 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ஆளுநர் தேநீர் விருந்து… திமுக கூட்டணி கட்சிகள் மீண்டும் புறக்கணிப்பு!

மனுபாக்கருக்கும் நீரஜ் சோப்ராவுக்கும் கல்யாணமா? – தந்தை சொல்வது என்ன?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share