ரூ.105 கோடியுடன் காத்திருக்கும் பஞ்சாப் அணி… எந்த எந்த அணி எவ்வளவு செலவழிக்கலாம்?

விளையாட்டு

மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை ஐ.பி.எல் மெகா ஏலம் நடைமுறைக்கு வரும். அப்போது, ஒவ்வொரு அணியும் 5 வீரர்களை தக்கவைத்து கொண்டு மற்றவர்களை பொது ஏலத்துக்கு விட வேண்டும். இந்த வீரர்கள் ஏலம் விடப்படுகையில் விரும்பும் அணிகள் அதிக தொகை கொடுத்து ஏலம் எடுத்துக் கொள்ளலாம். வரும் டிசம்பர் மாதத்தில் ஐ.பி.எல் ஏலம் துபாய் அல்லது ரியாத்தில் நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஏலத்தில் ரிடெய்ன் செய்யப்பட்ட வீரர்களை தவிர மற்றவர்களை தேர்வு செய்ய ஒரு  அணி எவ்வளவு செலவு செய்யலாம் என்று பார்க்கலாம்.

சென்னை அணி 5 வீரர்களை தக்க வைக்க 65 கோடி செலவழித்துள்ளது. இன்னும், 55 கோடி செலவழிக்கலாம். தங்கள் வீரரை தக்க வைத்து கொள்ள ஒரு ஆர்.டி.எம். உள்ளது.

டெல்லி அணி 47 கோடி செலவழித்துள்ளது. இன்னும் 73 கோடி செலவழிக்கலாம். ஒரு அன்கேப்டு, கேப்டு ஆர்.டி.எம் உள்ளது.

கொல்கத்தா அணி 69 கோடி செலவு செய்துள்ளதால் 51 கோடிக்கு வீரர்களை வாங்க முடியும். இந்த அணிக்கு ஆர்.டி.எம் இல்லை.

ஆர்.சி.பி அணி 37 கோடி செலவழித்துள்ளது. 83 கோடி கையிருப்பு உள்ளது. ஒரு அன்கேப்டு இரு கேப்டு என 3 ஆர்.டி.எம் இந்த அணிக்கு இருக்கிறது.

லக்னோ அணி 51கோடி செலவழித்துள்ளது. 69 கோடி கையிருப்பு உள்ளது. ஒரு கேப்டு வீரருக்கான ஆர்.டி.எம். இந்த அணிக்கு உள்ளது.

பஞ்சாப் அணி இரு வீரர்களைத்தான் தக்க வைத்துள்ளது. 9.5 கோடி மட்டுமே செலவழித்துள்ளது. எனவே 110.5 கோடிக்கு வீரர்களை வாங்க முடியும். இந்த அணியால் 4 கேப்டு வீரர்களை ஆர்.டி.எம் செய்து கொள்ள முடியும்.

மும்பை இந்தியன்ஸ் அணி 75 கோடி செலவழித்துள்ளதால் 45 கோடிக்கு மட்டுமே வீரர்களை வாங்கிக் கொள்ள முடியும். ஒரு அன்கேப்டு வீரரை ஆர்.டி.எம். செய்யலாம்.

ஹைதரபாத் அணி 75 கோடி செலவழித்திருக்கிறது. இதனால், 45 கோடி செலவு செய்யலாம். ஒரு அன்கேப்டு ஆர்.டி.எம். உள்ளது. ராஜஸ்தான் அணி 99 கோடிக்கு செலவு செய்து விட்டதால் கையிருப்பு 41 கோடிதான். ஆர்.டி.எம். இல்லை.

குஜராத் அணி 51  கோடி செலவழித்துள்ளது. 69 கோடி செலவு செய்ய முடியும். ஒரு கேப்டு வீரர் ஆ.டி.எம். உள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

எம்.குமரேசன்

“மாவீரர்களின் தியாகத்தைப் போற்றும் நாள் நவம்பர் 1”: ஸ்டாலின்

வெங்காய வெடியால் சிதறிய உடல்… டெட்டனேட்டருக்கு சமமாம்!

 

 

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

1 thought on “ரூ.105 கோடியுடன் காத்திருக்கும் பஞ்சாப் அணி… எந்த எந்த அணி எவ்வளவு செலவழிக்கலாம்?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *