“மீண்டும் தோனியிடம் ஆட்டோகிராப் வாங்குவேன்”: கவாஸ்கர்

Published On:

| By Selvam

ஐபிஎல் இறுதிப்போட்டிக்கு பிறகு தோனியிடம் மீண்டும் ஒருமுறை ஆட்டோகிராப் வாங்குவேன் என்று இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் கிரிக்கெட் இறுதி போட்டியில் இன்று ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் மோதி வருகிறது. குஜராத் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்று வரும் போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

போட்டி நடைபெறுவதற்கு முன்னாள் ஸ்டார்ஸ் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரும் வர்ணனையாளருமான கவாஸ்கர் பேசும்போது, “நான் தோனியின் மிகப்பெரிய ரசிகன். ஒவ்வொரு ஆண்டும் அவர் தனது திறமையை நிரூபித்து கொண்டிருக்கிறார். ஐபிஎல் இறுதி போட்டிக்கு பிறகு மீண்டும் ஒருமுறை நான் அவரிடமிருந்து ஆட்டோகிராப் வாங்குவேன் என நம்புகிறேன்.

ஹர்திக் பாண்டியா மிகவும் உற்சாகமான கிரிக்கெட் வீரர். அதனால் தான் அவர் கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் கேப்டனாக முதல்முறையாக பொறுப்பேற்றதும் கோப்பையை கைப்பற்றினார். அவர் அணி வீரர்களிடம் நடந்து கொள்வது தோனியை நினைவூட்டுகிறது” என்று தெரிவித்துள்ளார்.

மே 15-ஆம் தேதி சென்னை, கொல்கத்தா அணிகள் இடையே நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் தோனியிடம் காவாஸ்கர் ஆட்டோகிராப் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel