சுரேஷ் ரெய்னாவுக்கு டாக்டர் பட்டம்: தமிழக பல்கலை அறிவிப்பு!

விளையாட்டு

இந்திய கிரிகெட் அணி வீரர் சுரேஷ் ரெய்னாவுக்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்குவதாக தமிழகத்தின் புகழ் பெற்ற வேல்ஸ் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

ஆகஸ்ட் 5 ஆம் தேதி நடக்கும் வேல்ஸ் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கெளரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது.

பிரபல இந்திய கிரிகெட் வீரர் சுரேஷ் ரெய்னா சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக 2020 ஆம் ஆண்டு அறிவித்தார். இவர் இந்திய அணிக்காக 226 ஒருநாள் போட்டிகளிலும் , 18 டெஸ்ட்போட்டிகளிலும், 78 , 20 ஓவர் போட்டிகளிலும் விளையாடியுள்ளார். ஐபிஎல் போட்டியில் 205 போட்டிகளைச் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடியுள்ளார் சுரேஷ் ரெய்னா .

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடிய 11 ஆண்டுகளில் 10 ஆண்டுகள் தன்னுடைய சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 2020 ஆம் ஆண்டு தன்னுடைய சொந்த காரணங்களுக்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இந்த அறிவிப்பு ரசிகர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

2021 ஆம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மீண்டும் இடம் பெற்றார் சுரேஷ் ரெய்னா. அதில் அந்த அணி ஐபிஎல் கோப்பையை கைப்பற்றியது. இந்த ஆண்டு நடைபெற்ற ஐபில் போட்டியில் சுரேஷ் ரெய்னாவை சென்னை சூப்பர் கிங்ஸ் ஏலத்தில் எடுக்கவில்லை.

இந்நிலையில் , இந்திய கிரிகெட் அணி வீரர் சுரேஷ் ரெய்னாவுக்கு கெளவரவ டாக்டர் பட்டம் வழங்குவதாக சென்னை , பல்லாவரத்தில் இயங்கி வரும் வேல்ஸ் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து, வேல்ஸ் பல்கலைக்கழக நிறுவனர், வேந்தர் ஐசரி கே.கணேஷ் , “ஆகஸ்ட் 5 அன்று நடைபெறவுள்ள பட்டமளிப்பு விழாவில் வேல்ஸ் பல்கலைக்கழகத்திடமிருந்து கெளரவ டாக்டர் பட்டத்தை சுரேஷ் ரெய்னா பெறுவார்” என்று கூறியுள்ளார்.

மு.வ.ஜெகதீஸ் குமார்

ஆசியக் கோப்பை கிரிக்கெட்: பாகிஸ்தானுடன் மோதுகிறது இந்தியா

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0