Hockey: India is awesome

ஹாக்கி: அரையிறுதிக்கு முன்னேறியது இந்தியா

விளையாட்டு

கடந்த 3 ஆம் தேதி தொடங்கிய 7 வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி தொடர் வரும் 12 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

அதன்படி இந்த போட்டியில், இந்தியா, சீனா, பாகிஸ்தான், மலேசியா, கொரியா, ஜப்பான் ஆகிய அணிகள் கலந்து கொண்டு விறுவிறுப்பாக விளையாடி வருகின்றன.

இந்நிலையில், 5 வது நாளான நேற்று (ஆகஸ்ட் 7) மூன்று ஆட்டங்கள் நடைபெற்றன. அதன்படி, மாலை 4 மணிக்கு நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ஜப்பான்- மலேசியா அணிகள் மோதின.

இதில், 3-1 என்ற கோல் கணக்கில் மலேசிய அணி ஜப்பானை வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலம், ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி தொடரில் முதல் அணியாக மலேசிய அணி முன்னேறியது.

இதனைத் தொடரந்து, மாலை 6.15 மணிக்கு தொடங்கிய 11-வது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான்- சீனா அணிகள் மோதின. இதில், பாகிஸ்தான் அணி 2-1 என்ற கோல் கணிக்கில் சீனாவை வீழ்த்தி வெற்றி பெற்றது.

Hockey: India is awesome

இதையடுத்து, இரவு 8.30 மணிக்கு இந்தியா- கொரியா அணிகள் மோதின.

பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில், ஆட்டம் தொடங்கிய 6-வது நிமிடத்தில் இந்திய வீரர் நீலகண்டா ஷர்மா முதல் கோல் அடித்தார். 12-வது நிமிடத்தில் கொரியா வீரர் கிம் சங்யுன் கோல் அடித்து சமன் செய்தார்.

இதனைத்தொடர்ந்து 23-வது நிமிடத்தில்,கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் ஒரு கோலும், 33-வது நிமிடத்தில் மன்தீப்சிங் ஒரு கோலும் அடித்து அசத்தினர்.

கொரியா வீரர்கள் கோல் அடிக்க கடுமையாக போராடினார். 58 வது நிமிடத்தில் ஜிஹன் யாங் ஒரு கோல் அடித்தார்.

ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது.

லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் கொரியாவை வீழ்த்தி இந்தியா அரையிறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மு.வா.ஜெகதீஸ் குமார்

கிச்சன் கீர்த்தனா: முளைப்பயிறு சப்பாத்தி!

ED விசாரணையில் செந்தில் பாலாஜி : அடுத்த கைது யார்?

+1
0
+1
0
+1
0
+1
3
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *