நட்சத்திர கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் கடந்த 1989ஆம் ஆண்டு தன்னுடைய 16 வயதில் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமாகி தரமான பந்து வீச்சாளர்களான வாசிம் அக்ரம் , இம்ரான் கான் போன்ற வீரர்களின் பந்து வீச்சை எதிர்கொண்டு குறுகிய காலத்திலேயே நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுத்தார்.
90 காலக்கட்டங்களில் சச்சின் அவுட்டாகி விட்டால் தொலைக்காட்சிகளை அணைத்து வைத்துவிட்டு அடுத்த வேலையை பார்க்கச் சென்று விடுவார்கள் கிரிக்கெட் ரசிகர்கள்.
சச்சின் டெண்டுகல்கர் தன் அனுபவத்தால் அற்புதமாக செயல்பட்டு 100 சதங்களை அடித்து 30000-க்கும் மேற்பட்ட ரன்களை குவித்து 1999 கோகோ கோலா கோப்பை முதல் 2011 உலகக்கோப்பை வரை இந்தியாவின் பல வெற்றிகளில் முக்கிய பங்காற்றியுள்ளார்.
இப்படிப்பட்ட சச்சின் டெண்டுல்கரை கிரிக்கெட்டின் முதல் சூப்பர் ஸ்டார் பேட்ஸ்மனாக 99.94 என்ற டெஸ்ட் பேட்டிங் சராசரியை இப்போதும் உலக சாதனையாகக் கொண்டுள்ள ஆஸ்திரேலிய ஜாம்பவான் ’டான் ப்ராட்மேன்’ பாராட்டியது யாராலும் மறக்க முடியாது.

இளம் வயதில் முதல் முறையாக ஆஸ்திரேலிய மண்ணில் விளையாடி சதமடித்த சச்சினை பார்ப்பது தம்மை பார்ப்பது போலவே இருப்பதாக தன்னுடைய மனைவியிடம் டான் ப்ராட்மேன் மகிழ்ச்சியுடன் பாராட்டினார்.
அந்த காலத்திலேயே உலக அளவில் பிரபலமான அந்த பேட்டியில் டான் பேசியதாவது “தொலைக்காட்சியில் அவர் (சச்சின் ) விளையாடுவதை பார்த்த நான் அவருடைய டெக்னிக்கில் அசந்து விட்டேன்.
அதனால் என்னுடைய மனைவியை அழைத்த நான் அவருடைய பேட்டிங்கை பார்க்குமாறு கேட்டுக் கொண்டேன்.
என்னுடைய காலங்களில் யாரும் இப்படி விளையாடியதை நான் பார்த்ததில்லை.
ஆனால் இந்த வீரரை பார்க்கும் போது நான் விளையாடுவதை பார்ப்பது போன்ற உணர்வு ஏற்படுவதாக எனது மனைவியிடம் சொன்னேன்.
அவரும் தொலைக்காட்சியில் சச்சினை பார்த்து விட்டு உங்கள் இருவருக்கும் நிறைய ஒற்றுமைகள் இருப்பதாகச் சொன்னார்” என்று கூறியிருந்தார் டான் ப்ராட்மேன்.
இந்நிலையில் , 22வயதில் இருக்கும் போது தன்னை ப்ராட்மேன் போன்ற ஒருவர் அவ்வாறு பாராட்டியது அந்த இளம் வயதில் தங்கத்தை விட அதிக மதிப்பு மிக்க ஒன்றாக கருதியதாக பழைய நினைவுகளை சச்சின் டெண்டுல்கர் அண்மையில் பகிர்ந்துள்ளார்.
இது பற்றி ABC AUSTRALIA எனும் பிரபல ஆஸ்திரேலிய ஊடகத்தின் ’ப்ராட்மேன் – டெண்டுல்கர் தி அண்டோல்ட் ஸ்டோரி’ என்ற ஆவணப்படத்தில் பேசிய சச்சின் டெண்டுல்கர் “பிராட்மேன் சொன்னது மிகப்பெரிய விசயம்.
அந்த சமயத்தில் நான் வெறும் 22வயது இளைஞனாக மட்டுமே இருந்தேன்.

ஆனால் ஒரு 22வயதுடைய விளையாட்டு வீரருக்கு அது போன்ற ஒரு பாராட்டை கேட்பது தங்கத்துக்கு நிகரானதாகும்.
அப்படி ஒரு பாராட்டு வந்த போது ‘வாவ் இதற்காகவே நான் இன்னும் சிறப்பாக செயல்பட வேண்டும்’ என்று நினைத்தேன்” என்று சச்சின் டெண்டுல்கர் கூறியுள்ளார்.
ஆம், 22 வயது இளம் வீரரை உலகின் மிகச்சிறந்த பேட்ஸ்மேனான ப்ராட்மேன் போன்றோர் வாழ்த்தியது திறமை எங்கு இருந்தாலும் அது போற்றப்படும் என்பதற்கான சான்றுதானே.
மு.வா.ஜெகதீஸ் குமார்
“சட்ட விதிகளின் படி எடப்பாடி பொதுச்செயலாளராக தேர்வு”: தலைமை கழகம்!
ஸ்டாலின், உதயநிதியை பாராட்டிய பாமக