கிளாசன் அபார சதம்: பெங்களூரு அணிக்கு 187 ரன்கள் இலக்கு!

Published On:

| By Jegadeesh

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் ஹென்றி கிளாசன் அபாரமாக விளையாடி தன்னுடைய முதல் ஐ.பி.எல் சதத்தை பதிவு செய்தார்.

ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிகள் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்நிலையில் ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் இன்று (மே 18) நடைபெறும் 65-வது லீக் ஆட்டத்தில் ஹைதராபாத் சன்ரைசர்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதுகின்றன.

டாஸ் வென்ற பெங்களூரு அணி கேப்டன் டு பிளசிஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் ஷர்மா 11 ரன்னிலும், ராகுல் திரிபாதி 15 ரன்னிலும் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.

அடுத்து இறங்கிய கேப்டன் மார்கிராமுடன் கிளாசன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி 3வது விக்கெட்டுக்கு 76 ரன்கள் சேர்த்த நிலையில் மார்கிராம் 18 ரன்னில் ஆட்டமிழந்தார்.

அதிரடியாக ஆடிய கிளாசன் தன்னுடைய முதல் ஐ.பி.எல் சதத்தை பதிவு செய்தார்.

51 பந்துகளை எதிர்கொண்ட அவர் 104 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அதில் 6 சிக்ஸர்களும் , 8 பவுண்டரிகளும் அடங்கும்.

இறுதியில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 186 ரன்களை குவித்தது. இதையடுத்து, 187 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூரு அணி விளையாடி வருகிறது.

மு.வா.ஜெகதீஸ் குமார்

“நாட்டு மாடுகளை பாதுகாக்க வேண்டும்”: ஈஸ்வரன் வலியுறுத்தல்!

“யாதும் ஊரே யாவரும் கேளிர்”: நல்லக்கண்ணு பாராட்டு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel