‘அவருக்கு போடியம் ஏற தகுதியில்லை! ‘- ஐசிசி விளக்கத்தால் கண் சிவந்த பாகிஸ்தான்

Published On:

| By Kumaresan M

இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபி கோப்பையை வென்றது. ஆனால், பரிசளிப்பு விழாவில் போட்டியை நடத்திய பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய அதிகாரிகள் யாரும் பங்கேற்கவில்லை என்கிற குற்றச்சாட்டு எழுந்தது.

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் மோஷின் நக்வி அந்த நாட்டு உள்துறை அமைச்சராக இருப்பதால், தன்னால் பரிசளிப்பு விழாவில் பங்கேற்க முடியாது என்று ஏற்கனவே ஐ.சி.சியிடம் தெரிவித்துள்ளார்.

அதே வேளையில், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைமை செயல் அதிகாரி சுமைர் அகமது சையத் இறுதிப் போட்டியின் போது, துபாய் மைதானத்தில் இருந்துள்ளார். ஆனால், அவரை கண்டு கொள்ளாமலேயே ஐசிசி பரிசளிப்பு விழாவை நடத்தியுள்ளது.he was not eligible to ceremony

இதையடுத்து விளக்கமளித்த ஐசிசி, “பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் மோஷின் நக்வி இறுதிப்போட்டிக்கு வந்திருந்தால், அவர்தான் பரிசளித்திருப்பார். அவர், தன்னால் வரமுடியாது என்று ஏற்கனவே கூறி விட்டதால், பரிசளிப்பு நிகழ்ச்சிகளை மாற்றியமைத்தோம். விதிமுறைகளின்படி சாம்பியன்ஸ் டிராபி பரிசளிப்பு விழா போடியத்தில் தலைமை செயல் அதிகாரி ஏற தகுதியில்லை’ என்று ஐசிசி விளக்கம் தெரிவித்துள்ளது.

ஆனால், இந்த விளக்கத்தை ஏற்றுக் கொள்ளாத பாகிஸ்தான் ஐசிசியின் நடத்தையை கண்டித்து கடுமையான வார்த்தைகளால் கடிதம் எழுதியுள்ளதாக சொல்லப்படுகிறது. he was not eligible to ceremony

சாம்பியன்ஸ் டிராபி பரிசளிப்பு விழாவில் ஐசிசி தலைவர் ஜெய்ஷா கோப்பையை வழங்கினார். பிசிசிஐ தலைவர் ரோஜர் பின்னி வீரர்களுக்கு பிரேஸர் அணிவித்தார். நிகழ்ச்சியில் பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைகியா, நியூசிலாந்து கிரிக்கெட் போர்டு தலைமை செயல் அதிகாரி ரோஜர் ட்வோஸ் ஆகியோர் பங்கேற்றனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share