இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ரிஷப் பண்ட் டி20, ஒருநாள் போட்டிகளில் கடந்த சில ஆட்டங்களாக சிறப்பாக விளையாடவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.
இதன் காரணமாக ரிஷப் பண்ட்க்கு பதிலாக அணியில் சஞ்சு சாம்சனை சேர்க்க வேண்டும் என பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் , வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 48 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அப்போது களத்திற்கு வந்த ரிஷப் பண்ட் அதிரடியாக விளையாடி 45 பந்துகளில் 46 ரன்கள் குவித்தார்.
இதில் ஆறு பவுண்டரிகளும், இரண்டு சிக்ஸர்களும் அடங்கும். இந்த நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சல்மான் பட் அவருடைய யூடியூப் சேனலில் பேசியபோது ”ரிஷப் பண்ட் அவர் விருப்பப்படி விளையாட முயற்சி செய்கிறார்.
ஆனால் புது வகையான ஷாட்களை ஆடுகிறேன் என முயற்சி செய்து ஆட்டம் இழந்து விட்டார். ரிஷப் பண்ட் ஆட்டம் இழந்த முறை மிகவும் வித்தியாசமானது.
அவருடைய பேட் மற்றும் கால்கள் ஆகியவற்றின் மீது பந்து பட்டு பிறகு ஸ்டெம்பை அது பதம் பார்த்தது. நான் ரிஷப் பண்ட் குறித்து எப்போதுமே ஒன்றுதான் சொல்வேன்.
ரிஷப் பண்ட் அவர் உடல் தகுதியை கவனம் செலுத்த வேண்டும். ஏனென்றால் அவர் வித்தியாசமான ஷாட்டுகளை ஆட முயற்சி செய்கிறார்.
அப்போது அவர் உடல் தகுதி சரியாக இருந்தால் தான் அந்த ஷாட்டுகளை அவரால் தெளிவாக விளையாட முடியும். ரிஷப் பண்ட் ரொம்ப குண்டாக இருக்கிறார். அவர் இருக்க வேண்டிய எடையை விட தற்போது அதிகம் உள்ளார் என்று பார்த்தாலே தெரிகிறது.
அவர் குண்டாக இருப்பதன் காரணமாக அவரால் நினைத்த ஷாட்டை அடிக்க முடிவதில்லை. அவர் உடல் தகுதியை சிறப்பாக வைத்துக் கொள்ள வேண்டும் என்றால் ரிஷப் பண்ட் தனது எடையைக் குறைக்க வேண்டும்” என்று கூறியுள்ளார் .
இவரது இந்த கருத்து தற்போது சமூக வலைதளத்தில் பெரும் விவாதப் பொருளாக மாறி வருகிறது.
மு.வா.ஜெகதீஸ் குமார்
முதல் டெஸ்ட்: குல்தீப் சுழலில் சிக்கிய வங்கதேசம்
முதல் டெஸ்ட் போட்டி: முன்னிலையில் இந்தியா!