இந்திய அணிக்கு கடவுள் கொடுத்த பரிசு பும்ரா என முன்னாள் வீரர் அம்பத்தி ராயுடு புகழாரம் சூட்டியுள்ளார்.
2024 டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி இதுவரை 4 போட்டிகளில் விளையாடி, 4 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. குரூப் சுற்றில் இந்திய அணி விளையாடிய 3 போட்டிகளில், பும்ரா 2 முறை ஆட்டநாயகன் விருது பெற்றுள்ளார்.
அயர்லாந்துக்கு அணிக்கு எதிரான போட்டியில் 2 விக்கெட்டுகளை வீழ்த்திய பும்ரா, பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் 4 ஓவர்களில் 14 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
அமெரிக்காவிற்கு எதிரான போட்டியில் விக்கெட் வீழ்த்தவில்லை என்றாலும், சூப்பர் 8 சுற்றில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் அபாரமாக பந்துவீசி 4 ஓவர்களில் 7 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
டி20 உலகக்கோப்பை தொடரில் தற்போதுவரை பும்ரா 8 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் பும்ராவின் செயல்பாடுகள் குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் அம்பத்தி ராயுடு புகழ்ந்து தள்ளி உள்ளார்.
இதுகுறித்து பேசிய அம்பத்தி ராயுடு, “எப்போதும் போல் பும்ரா இந்த போட்டியிலும் சிறப்பாக செயல்பட்டார். சூழ்நிலைக்கு ஏற்ப தன்னை மாற்றி கொள்ளும் ஆற்றல் கொண்டவர்.
பும்ரா ஒரு அற்புதமான பந்துவீச்சாளர். இந்திய அணிக்கு கடவுள் கொடுத்த பரிசு பும்ரா. அதேபோல், இந்திய அணி அவரை தேர்வு செய்ததற்கு பாக்கியம் செய்திருக்க வேண்டும்” என புகழ்ந்து பேசினார்.
மேலும், அதே ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் அனைத்து இந்திய பேட்மேன்களும் தடுமாறிய போது சூர்யகுமார் யாதவ் சிறப்பாக விளையாடி அரை சதம் அடித்தார்.
இதனால் இந்திய அணி 20 ஓவர்களில் 181 ரன்களை எடுத்தது. சூர்யகுமார் யாதவின் பேட்டிங் திறன் குறித்தும் பேசிய அம்பத்தி ராயுடு, “சூர்யகுமார் யாதவ் சரியான நேரத்தில் சரியான விதத்தில் விளையாடினார். கிரிக்கெட் விளையாடும் அனைத்து பேட்ஸ்மேன்களுக்கும், இளைஞர்களுக்கும் ஒரு ஸ்லோவான பிட்ச்சில், பந்து வேகமாக வராத போது எப்படி பேட்டிங் செய்ய வேண்டும் என அவர் விளையாடிக் காட்டி உள்ளார்.
உலகின் சிறந்த ஸ்பின்னர்களுக்கு எதிராக அதிரடியான ஷாட்களை அடித்தார். அதனால்தான் அவர் டி20 கிரிக்கெட்டின் சிறந்த பேட்ஸ்மேனாக விளங்குகிறார். இதுவரை உள்ள காலகட்டத்தில் அவர்தான் சிறந்த டி20 பேட்ஸ்மேன். எந்த சூழ்நிலையாக இருந்தாலும் அவர் அதை சமாளித்து விளையாடுவார்” என அம்பத்தி ராயுடு கூறினார்.
இந்து
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
சென்னை ரிப்பன் மாளிகையில் புதிய மாமன்ற கூடம்: கே.என்.நேரு அறிவிப்பு!