கொல்கத்தா அணியின் இளம்வீரர் செய்த செயல் சமூக வலைதளங்களில், கடுமையான விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது.
நேற்று (மார்ச் 23) நடைபெற்ற கொல்கத்தா – ஹைதராபாத் அணிகள் இடையிலான போட்டியில், கொல்கத்தா அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் ‘திரில்’ வெற்றி பெற்றது.
இதன் மூலம் நடப்பு ஐபிஎல் தொடரில் முதல் 2௦௦ ரன்களை எட்டிய முதல் அணி என்னும் பெருமையும், கொல்கத்தா அணிக்கு கிடைத்துள்ளது.
SRH vs KKR: இப்டித்தான் எங்களுக்கும் இருந்துச்சு… கம்மின்சை ‘சைலண்ட்’ ஆக்கிய ஷாரூக் டீம்!
இதற்கிடையில் ஹைதராபாத் அணியின் ஓபனிங் வீரர் மயங்க் அகர்வாலை அவுட் ஆக்கிய ஹர்ஷித் ராணா தன்னுடைய செயலால், சமூக வலைதளங்களில் வெகுவாக கவனம் பெற்றுள்ளார்.
முன்னதாக ராணா வீசிய ஓவரில் அகர்வால் இரண்டு சிக்ஸ், ஒரு ஃபோர் அடித்தார். தொடர்ந்து 6-வது ஓவரை வீசிய ராணா மயங்க் அகர்வால் விக்கெட்டினை வீழ்த்தினார்.
இதையடுத்து அகர்வாலின் முகத்துக்கு நேரே, பிளையிங் கிஸ் கொடுத்து சிரித்த ராணா தொடர்ந்து அவரை முறைக்கவும் செய்தார்.
https://twitter.com/Media1436873/status/1771576573398749498
இதுதொடர்பான புகைப்படம் மற்றும் வீடியோ, தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதைப்பார்த்த ரசிகர்கள் ”என்ன இருந்தாலும் இப்படி செஞ்சது தப்பு பாஸ்” என, ராணாவுக்கு அட்வைஸ் கொடுத்து வருகின்றனர்.
https://twitter.com/mufaddal_vohra/status/1771575658205913409
மறுபுறம் ‘கிரிக்கெட்டில் இதெல்லாம் சகஜம்’ என ராணாவிற்கு சப்போர்ட் செய்தும் வருகின்றனர். எது எப்படியோ அதிரடி மன்னன் ரஸல், அட்டகாச கேட்ச் பிடித்து ஆட்டத்தின் போக்கை மாற்றிய சுயாஷ் சர்மாவை விட, ராணா தற்போது புகழடைந்து விட்டார் என்பது மட்டும் தெளிவாகத் தெரிகிறது.
–மஞ்சுளா
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
வேடந்தாங்கல் பறவை கூட்டணி: அப்டேட் குமாரு
எடியூரப்பா… அமித்ஷா… : பட்டியல் போட்டு ED-யிடம் கேள்வி எழுப்பும் மனோ தங்கராஜ்