IPL 2024: நான் வந்துட்டேன்னு சொல்லு… மும்பை கேப்டனாக நீடிக்கும் ஹர்திக் பாண்டியா?

Published On:

| By Manjula

மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியாவே நீடிப்பார் என, புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன.

மும்பை அணியின் கேப்டனாக நீடித்த ரோஹித் சர்மாவை நீக்கி விட்டு புதிய கேப்டனாக ஹர்திக் பாண்டியாவை அந்த அணி சமீபத்தில் அறிவித்தது.

இதற்காக குஜராத் அணியில் இருந்த ஹர்திக்கை டிரேடிங் முறையில் ரூபாய் 15 கோடி கொடுத்து மும்பை அணி வாங்கியது.

உலகக்கோப்பை தொடரின் போது ஏற்பட்ட காயத்தால் பாதியில் தொடரில் இருந்து வெளியேறிய ஹர்திக் இந்திய அணிக்கு இன்னும் திரும்பவில்லை.

அவர் மீண்டும் முழு உடற்தகுதியை எட்டி எப்போது இந்திய அணிக்கு திரும்புவார்? என்னும் கேள்விக்கு பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக இதுவரை எந்தவொரு விளக்கமும் அளிக்கவில்லை.

இதற்கிடையில் ஹர்திக் பாண்டியா ஆப்கானிஸ்தானுக்கு எதிராக ஜனவரியில் நடைபெறும் டி 20 தொடர், ஐபிஎல் தொடர் ஆகியவற்றில் விளையாட மாட்டார் என நேற்று (டிசம்பர் 23) தகவல்கள் வெளியாகின.

இதனால் மும்பை அணியின் கேப்டனாக மீண்டும் ரோஹித் சர்மாவை நியமிப்பார்களா? இதற்கு அவர் சம்மதிப்பாரா? என எக்கச்சக்க கேள்விகள் எழுந்தன.

இந்த நிலையில் ஹர்திக் ஐபிஎல் தொடரில் கேப்டனாக மும்பை அணியை வழி நடத்துவார் என, புதிய தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

அதோடு ஆப்கானிஸ்தான் டி20 தொடரின் போதே அவர் இந்திய அணிக்கு மீண்டும் திரும்புவார் என்றும் கூறப்படுகிறது.

இதனால் ஹர்திக் பாண்டியாவின் உடல்நிலை குறித்து, பிசிசிஐ விரைவில் அதிகாரப்பூர்வ தகவல்களை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மும்பை இந்தியன்ஸ் கேப்டன் பிரச்சினைக்கு சீக்கிரம் ஒரு முற்றுப்புள்ளி வைங்கப்பா!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

-மஞ்சுளா 

இப்போ யார கேப்டனா போடுறது?… இந்திய அணிக்கு வந்த இடியாப்ப சிக்கல்!

IPL2024: ‘கர்மா இஸ் எ பூமராங்’ மும்பைக்கு எதிராக பறக்கும் மீம்ஸ்கள்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel