இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற ஹாங்காங் அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.
ஆசியக் கோப்பை டி20 இன்று (ஆகஸ்ட் 31 ) நடைபெறும் ஆட்டத்தில் இந்தியா, ஹாங்காங் அணிகள் மோதுகின்றன.
இதில் டாஸ் வென்ற ஹாங்காங் அணியின் கேப்டன் நிசாகத் கான் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளார்.
இந்திய அணி ஏற்கனவே பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் வெற்றிபெற்ற நிலையில் , இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால் அரையிறுதிக்கு தகுதி பெற்றுவிடும்.
இன்றைய போட்டியில் ஹார்திக் பாண்டியாவுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பேசிய ரோஹித் ஷர்மா , “ஹார்திக் பாண்டியாவுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது.
அவர் அணியின் மிகமுக்கியமான வீரர். அவர் முக்கியமான போட்டிகளுக்கு தேவை. ஹார்திக் இல்லாததால் ரிஷப் பந்திற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது” எனக் கூறினார்.
இன்றைய இந்திய, ஹாங்காங் அணி வீரர்கள் பட்டியல்
இந்திய அணி வீரர்கள்: ரோஹித் ஷர்மா, கே.எல்.ராகுல், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரவீந்திர ஜடேஜா, தினேஷ் கார்த்திக், ரிஷப் பந்த், புவனேஷ்வர் குமார், ஆவேஷ் கான், யுஜ்வேந்திர சஹல், அர்ஷ்தீப் சிங்.
ஹாங்ஹாங் அணி வீரர்கள் : நிஜகட் கான் (கேப்டன்), யஷிம் மொர்டசா, பாபர் ஹயாத், கின்ஜித் ஷா, அஜிஸ் கான், ஸ்காட் மெக்கெசின், ஜாசன் அலி, ஹரூன் அர்சாத், இஷான் கான், முகமது காஜன்பர், ஆயூஸ் சுக்லா.
மு.வா.ஜெகதீஸ் குமார்
‘என்ன ஒரு த்ரில்லரான ஆட்டம்’ : இந்திய அணிக்கு குவியும் பாராட்டுகள்!