வருகின்ற 2024-ம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான, மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமிக்கப்பட்டு இருக்கிறார்.
குஜராத் அணியின் கேப்டனாக இருந்த ஹர்திக் பாண்டியாவை, மும்பை விடாப்பிடியாக ரூபாய் 15 கோடி கொடுத்து வாங்கிய போதே பலருக்கும் அந்த சந்தேகம் எழுந்தது.
எதற்காக இவ்வளவு முயற்சி செய்து அவரை மீண்டும் அணிக்கு அழைத்து வருகின்றனர்? என ரசிகர்களும் கேள்வி எழுப்பினர்.
அதற்கு தற்போது விடை கிடைத்துள்ளது. ஏற்கனவே நாம் எதிர்பார்த்தது போல மும்பை அணி அவரை தங்களது புதிய கேப்டனாக்கி அழகு பார்த்துள்ளது.
மும்பை அணிக்காக 5 கோப்பைகளை வென்று கொடுத்த ரோஹித் உலகக்கோப்பை தொடரில் கோப்பையை வெல்லவில்லை. அதோடு ஹர்திக் பாண்டியா தான் இந்திய அணியின் அடுத்த கேப்டனாக பார்க்கப்படுகிறார்.
அதுதான் இவ்வளவு பணத்தை கொட்டி ஹர்திக்கை, குஜராத் அணியில் இருந்து மும்பை வாங்குவதற்கு காரணம். ஒருவேளை ரோஹித் உலகக்கோப்பை வென்றிருந்தால் அவரே மும்பையின் கேப்டனாக தொடர்ந்திருப்பார்.
அதாவது இந்திய அணியின் முக்கியமான வீரர்கள் அனைவரும், தங்களது மும்பை அணியில் தான் இருக்க வேண்டும் என அந்த அணி நிர்வாகம் நினைக்கிறது.
To new beginnings. Good luck, #CaptainPandya 💙 pic.twitter.com/qRH9ABz1PY
— Mumbai Indians (@mipaltan) December 15, 2023
அந்த சுயநலம் தான் பிற அணிகளில் உள்ள சிறந்த வீரர்களை அதிக பணம் கொடுத்து வாங்க தூண்டுகிறது போல. எது எப்படியோ ரோஹித் மும்பை அணியின் வீரராக தொடர்வாரா? இல்லை வேறு அணிக்கு தாவுவாரா? என்பதை நாம் காத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
கடந்த 2013-ம் ஆண்டு பதவி ஏற்றுக்கொண்ட ரோஹித், தொடர்ந்து 11 ஆண்டுகள் மும்பை அணியின் கேப்டனாக இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…